உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 32.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இளைஞர் பக்கம்

93

II. கட்டுக் கட்டல்

ஆட்டின் பெயர் : நான்கு மூலைக்குங் கட்டுக்கட்டி ஆடும் பண்ணாங்குழி விளையாட்டுவகை, கட்டுக்கட்டல் எனப்படும்.

ஆடுவார் தொகை : இருவர் இதை ஆடுவர்.

ஆடு கருவி : இரு சமவரிசையாகவுள்ள பதினான்கு குழிகளும், குழிக்கைந்தாக அவற்றிற்கு வேண்டிய கற்களும், இதற்குரிய கருவிகளாம்.

போட்ட

ஆடுமுறை : ஆடகர் ஒவ்வொருவரும் தத்தம் வரிசையின் இடக்கோடி (அதாவது இடப்புறக் கடைசி)க் குழியினின்று தொடங்கி ஆடல்வேண்டும். எடுத்த கற்களையெல்லாம் ஒவ்வொன்றாய்ப் போட்டபின், கடைசியாகப் குழியினின்றே கற்களையெடுத்து ஆடல் வேண்டும். கடைசியாகப் போட்ட குழியில் ஏற்கெனவே ஒரு கல்லேனும் இருந்தால்தான், அதினின்று எடுக்க முடியும்; இல்லாவிட்டால் (அதாவது போட்டபின் ஒரு கல்லேயிருந்தால்) எடுக்க முடியாது. வெறுங்குழியைத் துடைத்து அடுத்த குழியிலிருந்தேனும், பிற வகையிலேனும், கற்களை எடுத்து வைத்துக்கொள்ளுதல் இவ் விளையாட்டில் இல்லை. ஒரு மூலைக் குழியில் ஏற்கெனவே மூன்று கல்லிருப்பின், நாலாவது கல்லைப் போடும்போது, அதைக் குழிக்குள் போடாமல் குழிக்குப் பக்கமாக வைத்துவிட வேண்டும். இதுவே ‘கட்டுக்கட்டல்' எனப்படுவது. கட்டுக் கட்டிய குழியில், கட்டினவரே மேற்கொண்டு கல்போட முடியும்; அடுத்தவர் போடமுடியாது. இங்ஙனம் ஒருவரேயோ இருவருமா கவோ நான்கு மூலைக்கும் கட்டுக் கட்டிக் கொள்ளலாம். கட்டிய குழியில் கல் போடலாமேயன்றி எடுக்க முடியாது. ஆதலால், கட்டுக்கட்டிய குழிகளில் மேலும் மேலும் கல் சேர்ந்து கொண்டே யிருக்கும். எல்லாக் கற்களும் நான்கு மூலைக்கும் போய்ச் சேர்ந்தபின் அவரவர் கட்டிய குழிக்கற்களை யெடுத்து எண்ணல் வேண்டும். மிகுதியான கற்களையுடையவர் வென்ற வராவர்.

6