உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 32.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




118

தமிழ்நாட்டு விளையாட்டுகள்

5. அரசனுந் தோட்டமும்

அரசனும் சேவகனும் தோட்டக்காரனும் தோட்டமும் (அதாவது பூசணிக்கொடிகளும்) என ஆடுவார் முதலாவது பிரிந்துகொள்வர்.

அரசன் சற்று எட்டத்திலிருந்து கொண்டு, பூசணித் தோட்டம் போடும்படி சேவகன்வழித் தோட்டக்காரனை ஏவுவன். தோட்டக் காரன் வேலை தொடங்குவன்.

அர சன் அடிக்கடி தன் சேவகனை ஏவித் தோட்டத்தின் நிலைமையைப் பார்த்துவிட்டு வரச் சொல்வன். சேவகன் வந்து கேட்கும் ஒவ்வொரு தடவையும், முறையே, ஒவ்வொரு பயிர்த்தொழில் வினை நிகழ்ந்துள்ளதாகத் தோட்டக்காரன் சொல்வான். இங்ஙனம் உழுதல், விதைத்தல், நீர் பாய்ச்சல். முளைத்தல், ஓரிலை முதற் பல இலைவரை விடல், கொடியோடல், களையெடுத்தல், பூப்பூத்தல், பிஞ்சுவிடல், காய் ஆதல், முற்றுதல் ஆகிய பல வினைகளும் சொல்லப்படும். உழுதல் முதற் காய் ஆதல் வரை ஒவ்வொருவினையைச் சொல்லும்போதும், தோட்டத்தை நிகர்க்கும் பிள்ளைகள் அவ்வவ் வினையைக் கையால் நடித்துக் காட்டுவர்.

காய்கள் முற்றியதைச்

66

முற்றியதைச் சொல்லுமுன், தோட்டக்காரன் காய்களைத் தட்டிப்பார்ப்பதுபோல் ஒவ்வொரு பிள்ளையின் தலையையும் குட்டி “முற்றிவிட்டதா?” என்று தன்னைத்தானே கேட்டு, சில தலைகளை முற்றிவிட்டது என்றும், சில தலைகளை "முற்றவில்லை” என்றும், சொல்லி; முற்றிவிட்டதென்று சொன்ன பிள்ளைகளை வேறாக வைப்பான். காய் கொண்டுவரும்படி அரசனால் ஏவப்பட்ட சேவகன் சில காய்களைக் கொண்டுபோய்த் தன் வீட்டில் வைத்திருப்பதுபோல், சில பிள்ளைகளைக் கொண்டு போய்ச் சற்றுத் தொலைவில் வைத்திருப்பான். அக் காய்கள் களவு போவதுபோல், அப் பிள்ளைகள் தாம் முன்பிருந்த இடத்திற்கு