உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 32.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




குழந்தைப் பக்கம்

131

தொலைவான இடத்தில் வேலை செய்யும் அண்ணனுக்குப் பருப்பும் சோறும் கொண்டுபோகும் தங்கையை, ஒருவர் கிச்சுக் காட்டிய வினையை இவ் விளையாட்டுக் குறிக்கும்போலும்!

2. ‘அட்டலங்காய் புட்டலங்காய்’

செவிலித்தாய் அல்லது மூதாய் (பாட்டி) பல குழந்தைகளை வரிசையாகக் கால்நீட்டி உட்காரவைத்து, அவர்கள் கால்களை இட வலமாகவும் வல இடமாகவும் தடவிக்கொண்டு,

6

"அட்டலங்காய் புட்டலங்காய் அடுக்கடுக்காய் மாதுளங்காய் பச்சரிசி குத்திப் பரண்மேலே வைத்திருக்கு

தேங்காய் உடைத்துத் திண்ணைமேலே வைத்திருக்கு மாங்காய் உடைத்து மடிமேலே வைத்திருக்கு உப்புக் கண்டஞ் சுட்டு உறிமேலே வைத்திருக்கு

எந்தப் பூனை தின்றது இந்தப் பூனை தின்றது

99

என்று பாடி, “இந்தப் பூனை” என்று சொல்லும்போது ஒரு குழந்தை யைச் சுட்டிக்காட்டுவாள்.

பூனை உறியிலுள்ள உப்புக்கண்டத்தைத் தின்றுவிட்டதைக்

குறிப்பதாக உள்ளது இவ் விளையாட்டு.