உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 32.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பெரியோர் பக்கம்

133

(2) இரவாட்டு

கழியல்

ஒரு குறிப்பிட்ட தொகையினர், குறிப்பிட்ட இடங்களில் நெருங்கி நின்றுகொண்டு, ஒவ்வொரு கையிலும் ஒவ்வொரு குறுங்கழி ஏந்தி அவற்றைப் பிறர் கழிகளோடு தாக்கியடித்து, பின்னிப் பின்னியும் சுற்றிச் சுற்றியும் வரும் ஆட்டு, கழியல் எனப்படும்.

L

இது பகலிலும் ஆடற்குரியதாயினும், பொதுவாக இரவிலேயே ஆடப்பெறும்.இதற்கும் கும்மிக்குப் போல் ஒரு தனிவகைப் பாட்டுண்டு.

அது,

தன்னன தன்னன தன்னான தன்னன தானன தன்னான

என்னும் வண்ணம் பற்றியதாகும்.

தன