இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
1
இளைஞர் பக்கம்
1. ஆண்பாற் பகுதி
ஆ
ஏறத்தாழ 5 அகவை முதல் 25 அகவை வரையுள்ளோர் ஆடும்
விளையாட்டுத்
தொகுதி இளைஞர்
(அகவை = வ வயது.)
(I) பகலாட்டு
1. கோலி
பக்கம்
ஆகும்.
(1) பாண்டிநாட்டு முறை
ஆட்டின் பெயர் : கல்லாலுங் கண்ணாடியாலும் இயன்ற சிற்றுருண்டைகளைத் தெறித்தும் உருட்டியும் ஆடும் ஆட்டு, கோலி எனப்படும்.(கோலி = உருண்டை).
•
ஆடுவார் தொகை சிறுவருள்ளும் இளைஞருள்ளும், பெரும்பான்மை இருவரும் சிறுபான்மை மேற்பட்டவரும் இதை ஆடுவர்.
ஆடுகருவி : ஒன்றற்கொன்று ஏறத்தாழ நாலடித் தொலைவில், அகலளவான வாயும் ஓரங்குல ஆழமுமுள்ளனவாக, வரிசையாய் நிலத்திற் கில்லப்பட்ட மூன்று குழிகளும், ஆடகன் ஒவ்வொருவனுக்கும் ஒவ்வொரு கோலியும், இதற்குரிய கருவிகளாம். கோலியாட்டின் ஏனை முறைகட்குரிய குழியும், இங்குக் கூறப்பட்ட அளவினதே.