உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 32.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




22

தமிழ்நாட்டு விளையாட்டுகள்

பாண்டி நாட்டில், குச்செடுப்பவன் குச்சு நிலத்தில் விழுமுன் அதை அந்தரத்திற் பிடித்துக்கொள்வதற்கு ஒரு சிறப்புப் பெயரும் வழங்கவில்லை. சோழ கொங்கு நாடுகளில் அது உத்தம் அல்லது புட்டம் எனப்பெயர்பெறும். இது கீழ்வரும் கிட்டிப்புள்ளிற்கும் ஒக்கும்.

6

எடுத்து ஊற்றுதல்' என்னும் பாண்டிநாட்டுக் குறியீட்டிற்கு நேரான சோழ கொங்குநாட்டுக்குறியீடு ‘கஞ்சிவார்த்தல்' என்பதாகும்.

(2) கருவி : சில்லாங்குச்சு ஒரு கடையில் மட்டுங் கூராயிருக்கும். ஆயின், கில்லி இருகடையுங் கூராயிருக்கும். இது இருமுனையும் அடித்தற்கு வசதியாம்.

(3) முறை : இரு கட்சியார் ஆடுவதாயின், பாண்டி நாட்டில் அடிக்குங் கட்சியார் அனைவரும் ஒரே சமையத்தில் அடிப்பர். அவனவன் அடிக்குங் குச்சை அவனவன் உத்தியாளே எடுப்பன். சோழ கொங்கு நாட்டிலோ, அடிக்குங் கட்சியாருள் ஒருவனே ஒரு சமையத்தில் அடிப்பன். அவன் அடித்த குச்சை எதிர்க்கட்சியார் எல்லாரும் ஆடுகளத்தில் நின்று அவருள் யாரேனும் பிடிக்கலாம் அல்லது எடுக்கலாம். அடிக்குங் கட்சியாருள் ஒருவன் தொலைந்த பின் இன்னொருவன் ஆடுவன். இங்ஙனம் ஒவ்வொருவனாக எல்லாருந் தொலைந்தபின் ஓர் ஆட்டை ஒருவாறு முடியும். இங்ஙனம் ஆடுவது கிரிக்கட்டு (cricket) என்னும் ஆங்கில விளையாட்டை ஒருபுடை யொத்திருப்பதால், இவ் ஆட்டை 'இந்தியக் கிரிக்கட்டு நகைச்சுவையாகக் கூறுவது வழக்கம்.

என

பாண்டி நாட்டில், அடிக்கப்பட்ட குச்சுப் போய்விழுந் தொலைவை அளந்து அதுகொண்டு வெற்றியைக் கணிப்பதில்லை. அடிக்குங் கட்சியர் அனைவருந் தொலைந்தபின், எதிர்க்கட்சியார் தாண்டை

ஆடல்வேண்டும். சோழ காங்கு நாட்டிலோ,

அளவுகோலாக வைத்துக்கொண்டு, ஒவ்வொரு முறையும் அடிக்கப்பட்ட குச்சுப் போய்விழுந் தொலைவைக் கருவி கொண்டோ மதிப்பாகவோ அளவிட்டு, குறித்த தொகை வந்த வுடன் எதிர்க் கட்சியாரைக் ‘கத்திக் காவடி யெடுக்கச் செய்வர். குறித்த தொகை வருவதற்கு எத்துணைப்பேர் அடித்தனரோ, அத்துணைப் பேரும் குழியினின்று குச்சை மும்மூன்று தடவை