உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 32.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




28

தமிழ்நாட்டு விளையாட்டுகள்

5. மரக்குரங்கு

('கொம்பரசன் குழையரசன்')

ஆட்டின் பெயர் : சிறுவர் மரத்திற் குரங்குபோல் ஏறி விளையாடும் ஆட்டு மரக்குரங்கு என்பதாம். இது பாண்டி நாட்டில் 'கொம்பரசன் குழையரசன்' என வழங்கும்.

ஆடுவார் தொகை : இருவர்க்கு மேற்பட்ட பலர் இதை ஆடுவர்.

ஆடுமுறை : ஆடுவாரெல்லாரும் ஒரு மரத்தருகே ஒரு வட்டக் கோட்டுள் நின்றுகொண்டு ஒவ்வொருவனாய் இடக்காலை மடக்கித் தூக்கி, அதன் கவட்டூடு ஒரு கல்லையாவது குச்சையாவது எறிவர். குறைந்த தொலைவு போக்கியவன், பிறர் மரத்திலேறிப் பிடிக்கச் சான்ன பின் அவரைப் பிடித்தல் வேண்டும். பிடிக்கிறவன் மரத்திலேறும்போது, சிலர் மரத்தினின்றும் குதித்து வட்டத்திற்குட் போய் நின்றுகொள்வர். சிலர் கிளைக்குக் கிளை தாவி ஆட்டங் காட்டுவர். வட்டத்திற்குட்போய் நிற்குமுன் யாரேனும் தொடப்பட்டுவிட்டால், அவன் அடுத்த ஆட்டையில் பிறரை முன் சொன்னவாறு பிடித்தல் று வேண்டும். மரக்கிளைகளி லிருக்கும்போது கொம்பரசன் குழையரசன் என்று பாண்டி நாட்டுச் சிறுவர் தம்மைக் கூறிக்கொள்வர்.

ஆட்டுத் தோற்றம் : குரங்குகளின் செயலினின்று இவ் ஆட்டுத் தோன்றியிருத்தல் வேண்டும்.

ஆட்டின் பயன் : மரமேறப் பயிலுதல் இவ் வாட்டின் பயனாம்.