உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 32.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இளைஞர் பக்கம்

31

8. குச்சு குச்சு விளையாட்டு

ஆட்டின் பெயர் : ஒரு குச்சைத் தலைக்குமேற் பிடித்து அதைத் தட்டி விளையாடுவது குச்சு விளையாட்டு.

ஆடுவார் தொகை : இதைப் பொதுவாய் ஐவர்க்கு மேற்பட்ட பலர் ஆடுவர்.

ஆடுகருவி : ஆடகன் ஒவ்வொருவனுக் கும் ஏறத்தாழ இருமுழ நீளமுள்ள ஒரு குச்சு வேண்டும்.

ஒரு முழச் சதுரமான ஓர் அரங்கு நிலத்திற் கீறி அதனுள் ஒரு சிறு வட்டத்திற்குள் நான்கு கற்கள் வைக்கப்படும்.

O

குச்சு விளையாட்டு

ஆடிடம் : பொட்டலிலும் திறந்தவெளி நிலத்திலும் இதை

ஆடலாம்.

ஆடுமுறை முதலாவது, ஆடகரெல்லாரும் ஓர் உத்திக் கோட்டின்மேல் ஒவ்வொருவனாய் நின்றுகொண்டு, அவனவன் தன்தன் குச்சை இடக்காற் கவட்டையூடு இயன்ற தொலைவு எறிவன். உத்திக்குக் கிட்ட எறிந்தவன் குச்சுப் பிடித்தல் வேண்டும்.

அவன் சதுர அரங்கிற்கு வெளியே பக்கத்திற்கொன்றாக ஈரெதிர்ப்பக்கத்தில் இரு காலையும் வைத்து, குச்சைத் தலைக்குமேல் இரு முனையையும் இருகையாற் பற்றிக்கொண்டு, நிற்றல் வேண்டும். யாரேனும் ஒருவன் அவன் குச்சைத் தன் குச்சால் தட்டிவிடுவான்.

னாருவன் அக் குச்சைச் சற்றுத் தொலை விற்குப் போக்குவான். ங்ஙனம் பிறரெல்லாம் அதைத் தம் குச்சால் தள்ளித் தள்ளி நெடுந்தொலைவிற்குக் கொண்டு போவர்.

குச்சுப் பிடித்தவன், தன் குச்சு விழுந்தவுடன் வட்டத்துள் ளிருக்கும் நாற்கல்லையும் எடுத்துச் சதுரத்தில் மூலைக்கொன்றாக