உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 32.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இளைஞர் பக்கம்

33

9. பம்பரம்

I. ஓயாக்கட்டை

சிறுவர், தம் பம்பரங்களை வட்டத்துளாயினும், வரம்பிலா நிலத்திலாயினும் ஒருங்கே ஆடவிட்டு, யாரது நீண்ட நேரம் ஆடுகின்றதென்று பார்க்கும் ஆட்டு ஒயாக்கட்டையாம். இது மீண்டும் மீண்டும் ஒரே வகையாய் ஆடப்பெறும்.

II. உடைத்த கட்டை

ஆட்டின் பெயர் : ஆட்டத்தில் தோற்றவனது பம்பரத்தை உடைக்கும் ஆட்டு உடைத்த கட்டை எனப்படும்.

பலர், ஒரு

ஆடுமுறை : இருவர்க்கு மேற்பட்ட சிறுவர் பலர், வட்டத்தின் நடுவில் ஒரு மாங்கொட்டையை வைத்து, ஒவ்வொரு வனாகப் பம்பரத்தை அதன்மேலேற்றி, அதை வெளியேற்றுவர். அது வெளியேறியவுடன், எல்லாரும் ஒருங்கே விரைவாகத் தன் தன் பம்பரத்தை ஆட்டிக் கைமேல் ஏற்றுவர். மிகப் பிந்தி ஏற்றியவன் தன் பம்பரத்தை வட்டத்தின் நடுவில் வைத்தல் வேண்டும்.

6

பம்பரத்தை யாட்டிக் கைமேலேற்றும்போது, 'அபிட்கோசு' அல்லது 'சிங்கோசு' என்று சொல்லிக்கொள்வதால், அங்ஙனம் ஏற்றுவதற்கு, 'அபிட்கோசெடுத்தல்' அல்லது ‘சிங் கோசெடுத்தல்' என்று பெயர்.

வட்டத்தின்

நடுவிலுள்ள பம்பரத்தை ஏனையோரெல் லாரும், முன்பு மாங்கொட்டையை வெளியேற்றியது போல் வெளியேற்றி, ஏறத்தாழ இருபது கசத் தொலைவிலுள்ள எல்லைக் கோட்டிற்குக் கொண்டு போவர். ஒவ்வொருவனாக அவனவன் தன்தன் பம்பரத்தை அதன்மேலேற்றித் தள்ளியே, அதைக் கொண்டு போதல் வேண்டும். அங்ஙனம் கொண்டு போம்போது, யாரேனும்