உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 32.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தடவையும் பாதங்களின் மேலுள்ள கல்லை ஒவ்வொன்றாய் இருபாத இடைக்குள் தள்ளித் தள்ளிப் பிடித்தல் வேண்டும்.

பிறகு மீண்டும், ஐங்கல்லையும் கீழிட்டு அவற்றுள் ஒன்றை முன்போல் நான்கு தடவை மேலெறிந்து, அதை ஒவ்வொரு தடவையும், கீழிருக்குங் கற்களை ஒவ்வொன்றாய் இடப்புறம் நிலத்திற் பொத்திச் சற்றே திறந்துவைக்கப்பட்டிருக்கும் இடக் குடங் கைக்குள் தள்ளித் தள்ளிப் பிடித்தல் வேண்டும்.

பின்பு, ஐங்கல்லையும் போட்டுப் புறங்கைமேல் தாங்கி, அவற்றுள் எதிரி சுட்டியதைப் பிறவற்றுடன் மேலெறிந்து பிடித்துக் காட்டி, அதைத் தனியே எடுத்துவைத்துவிட்டு, ஏனை நான்கனுள் ஒன்றை மேலெறிந்து, மூன்றைக் கீழே வைத்துப் பிடித்து, மீண்டும் அதை மேலெறிந்து கீழுள்ளவற்றை வாரிப் பிடித்தல் வேண்டும். அதோடு பழம்.

III. ஏழாங்கல் (ஒருவகை)

ஏழாங்கல்லின் இவ்வகை ஏறத்தாழ ஐந்தாங்கல்லின் முதல்வகை

போன்றதே.

உருட்டி அவற்றுள்

ஏழு கல்லையும் அவற்றுள் ஒன்றையெடுத்து மேலெறிந்து ஒன்றாங்கொட்டை முதல் ஏழாங்கொட்டை வரை யாடல் வேண்டும். ஒன்றாங் கொட்டையில் ஒவ்வொன்றாகவும், இரண்டாங்கொட்டையில் இவ்விரண்டாகவும், மூன்றாங்கொட் டையில் மும்மூன்றாகவும், நாலாங் கொட்டையில் இரண்டும் நாலுமாகவும், ஐந்தாங்கொட்டையில் ஐந்தும் ஒன்றுமாகவும், ஆறாங்கொட்டையில் ஆறும் ஒரேயடியாகவும், ஏழாங்கொட்டையில் ஒன்றும் இரண்டும் மூன்றுமாகவும், கீழிருக்குங் கற்கள் எடுக்கப்பெறும்.

பின்பு, முறையே, இழுத்தல் குத்தல் வைத்தல் வாரல் நான்கும் “தப்பு-தாளம்-தலைவலி-மோளம்" நான்கும் நிகழும்.

6

அதன்பின், எல்லாக் கற்களையும் மேலெறிந்து புறங்கையால் தாங்கவேண்டும். மூன்று கல்மட்டும் புறங்கைமேல் நிற்பின், அவை "கட்டான் கருங்கல்' எனக் கீழே போடப்படும். அதற்கு மேலுங் கீழும் நிற்பின் சொக்க வேண்டும்.