உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 34.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




முன்னுரை

5

காதல் என்பது, ஒருவரை யொருவர் இன்றியமையாக் கழிபெரு நேயமாய் இருவரிடை நிகழ்வது. அது, கோப்பெருஞ் சோழனும் பிசிராந்தையாரும் போலும் நண்பரிடத்தும், பெற்றோரும் பிள்ளையும் போலும் உறவினரிடத்தும், பூதப்பாண்டியனும் அவன் தேவியும் போலும் கணவன் மனைவியரிடத்தும், அமைவது. அது அரிய பிறவிக் குணம்.

கோவலனும் கண்ணகியும் இறந்தமை கேட்ட தாய்மார் உடலுயிர் துறந்தமை காண்க. கணவன் மனைவியரிடைப்பட்ட காதல் உண்மையில் இருவர்க்கும் பொதுவேனும், அது சிறப்பாக மனைவிக்கே அல்லது மனைவி யர்க்கே உரியது என்னும் தவறான கொள்கை, தொன்றுதொட்டு இருந்து வருகின்றது.

காமம் என்பது, கணவன் மனைவியரிடத்தேயே அல்லது ஆண் பெண் என்னும் இருபாலிடையேயே, நிகழக்கூடிய சிறப்புவகை நேயம். கணவன் மனைவியர் இல்லற வின்பம் துய்த்தற்குக் காரணமான நேயம் என்னும் பொருளிலேயே காமம் என்னுஞ் சொல்லை ஆண்டு, இன்பத்துப்பாலைக் காமத்துப்பால் எனக் குறித்தனர் வள்ளுவர். அச் சொல், இன்று கலவி வேட்கை என்னும் தவறான பொருளில் வழங்கிவருகின்றது.

இனி, அருள் என்பது யாதோவெனின்,

தாழ்ந்தோரிடத்துக் காட்டும் இரக்கம் என்க.

அது உயர்ந்தோர்