உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 35.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




கிறித்தவக் கீர்த்தனைகள்

9

இயேசுவின் இளமை

‘தினமணி வம்ச' என்ற மெட்டு

ப.

இளமையில் ஏசு இலகவே பெற்றோர் ஏவலில் நின்றார்

து.ப.

எளியரெ னாதுதம் இறைமையு மெணாது

குலவினை செய்தொரு குற்றமூ ளாது

உ.

பெற்றவர் தகைமையைப் பிறர்வியந் தேத்த பெருந்தகை பேணிப் பெரியவர் பணிந்து நித்தனருள் ஞானம் நிலத்தவர் தயவினும்

நிறைமதி நீர்மை நீட வளர்ந்தனர்

10

திருமுழுக்கு

‘சங்கற்பமே' என்ற மெட்டு

ப.

யோர்தான் நதி யோவன்னான் சம்மதி

யூதகுல பதி யபிடேக வாதி

119

(இளமை)

(இளமை)

து. ப.

பாரில் தேவவதி' பண்படு உந்திதி

பரம்புக மனந்திரும்புவார் கதி

(யோர்தான்)

வானிறப் புறாவின் வடிவாய்த் தூயாவி

வந்திறங்கித் தேவ மைந்தன்மேற் குலாவி

வானகப் பிதாவும் வாசகமொன் றேவி

வணங்குந் திரியேக திறம் மேவியே

(யோர்தான்)

1. வதி – வழி