உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 35.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




6

செந்தமிழ்க் காஞ்சி குலமெனப் படுவதும் தமிழே கோவெனப் படுவதும் தமிழே நலமெனப் படுவதும் தமிழே நாடெனப் படுவதும் தமிழே

தனிமொழி யானதும் தமிழே தாய்மொழி யானதும் தமிழே கனிமொழி யானதும் தமிழே கலைமொழி யானதும் தமிழே.

3. தமிழ் வாழ்த்து

‘கற்பிற் சிறந்த எந்தன் கனியே' என்ற மெட்டு

முத்தமிழ் எனுந்திரு மொழியே

பர வழியே

புல விழியே

கறும் பிழியே

(முத்தமிழ்)

இத்தரை தனிமுதல் இயற்கையி லெழுந்தே

எழிலுந் திரவிடம் எனுங்குலக் கொழுந்தே

முத்திற மொழிகளும் முகமுற விழுந்தே

முக்கிய மாகவுனைப் போற்ற

முடி யேற்ற

பெரு வீற்ற

பணி யாற்ற

(முத்தமிழ்)

ஏனைய மொழியினும் இலக்கண வரம்பே

இருப்பதால் அமரர்க்கும் இன்சுவைக் கரும்பே

நானில மொழிகளின் நடுவுறு நரம்பே

நடுவாகப் பலமத குலமே

நுகர் நலமே

விளை நிலமே

அருங் கலமே

ஓதுதற் கெளியவாய் உணர்வதற் கரிய உத்தம மறைபல உனக்கென உரிய

வாதவூரர் மூவரே வலமைகள் புரிய வாய்த்ததோர் பெருந்திருப் படையே கவி நடையே செவி மடையே எனை யடையே

(முத்தமிழ்)

(முத்தமிழ்)