உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 35.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




54

செந்தமிழ்க் காஞ்சி

3

வடமொழியின் கிளையே வண்டமிழ் என்று காட்டும் மடவகர முதலிய மன்னும் இத்தமிழ் நாட்டும்

4

(தமிழனே)

மறைமலை யடிகளை மறைத்தனர் முற்றும் இங்கே மறையவர் கையிற் சேரின் மலர்வது தமிழ் எங்கே?

(தமிழனே)

5

அரியணை மேல்தமிழை அமர்த்தினோம் என்றே சொல்லிப் புரியணை மேலிருத்திப் பொருத்துவர் பின்னே கொள்ளி

(தமிழனே)

(தமிழனே)

(தமிழனே)

6

இந்தியும் எந்தா யென்றே ஏற்றித் தொழுது நின்றார் நந்தமிழ் அந்தோ சொந்த நாட்டிலும் வாழ ஒன்றார்

7

ஆரியன் தெய்வ மென்றே அடிமைத் தனத்தில் வாழ்ந்தான் ஏரண உண்மை கண்டும் இழிந்த விலங்காய்த் தாழ்ந்தான் உ

20. தமிழன் உடைமை தமிழ் ஒன்றே 'நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்' என்ற மெட்டு

1

இருப்ப தெல்லாம் தமிழனுக்கே

இன்பத்தமிழ் ஒன்றே

இனியதையும் இழந்து விட்டால்

இங்கேவாழ் வில்லை

பொருத்தமுறும் தாய்க்கொலையும்

புரிகஎன் றுரைத்தால்

பொதுமதியால் அவ்வுரையின்

புன்மையறிந் திடுவீர்

(இருப்ப)