உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 35.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




முகவுரை

ஒருவன் எந்தப் பொருளையும் தான் உணர்ந்தவாறே பிறரை உணரச்செய்வதுதான் சரியான உபாத்திமத் தொழில். இப்படி அறியச் செய்வதற்கு வேண்டுவன இரண்டு. முதலாவது உபாத்தியாயர் சொல் வன்மை. இரண்டாவது கேட்பவரின் கவனம், கேட்பவர் கவனிப்பதற்குக் காரணமாவது, தாம் படிக்கவேண்டும் என்னும் ஆசையே. இவ் வாசை ஒருவனுக்குப் பகுத்தறிவு வந்தவுடன் உண்டாகும். பகுத்தறிவில்லாத சிறுவர்க்கு இவ் வாசையில்லை. ஆகவே அவர்க்கு ஆசையை உண்டாக் கவேண்டும். எப்படி? அவர்க்குப் பிரியமானவற்றைச் செய்யவேண்டும். அவையாவன :

1. பாட்டு : பாட்டைப் படிக்கவும் கேட்கவும் பெரியோர்க்குப் பிரியம். சிறுவர்க்கோ சொல்லவேண்டுவதில்லை. பாட்டிலே அவர்களுக்கு அதிக உற்சாகம். பாட்டின் மூலமாயே பல பொருள்களையும் அவர்களுக்குச் சொல்லிக் கொடுக்கவேண்டும். பாடிக்கொண்டு செய்யச்சொன்னால் பிரியமில்லாத வற்றையும் செய்வார்கள். உதாரணமாக தேகாப்பியரசம் (Drill) அவர்களுக்குப் பிரியமில்லை. பாடிச் செய்யச்சொன்னால் பிரியம். அப்படிப் பாடும்போது சைகைகளோடு பொருந்தப் பாடச்செய்வது நலம். இராகமும் நன்றாய் இருக்கவேண்டும்.

2. விளையாட்டு : இது சிறுவர் தாமாய்ப் பிரியமானபடி விளையாடுவது. இதற்கு ஒரு நேரமுண்டு.

3. கதை : இது சிறுவர்க்கு ஏற்றபடி சிறு சிறு கதைகளை எளிய நடையில் தெளிவாய்ச் சொல்வது.

ச்

4. கைவேலை: இது, சட்டி பண்ணுதல் குச்சடுக்குதல் முதலியன. தம் கையினால் ஒரு பொருளைச் செய்வது சிறுவர்க்கு ஒரு பெரிய பெருமை. அப்படிச் செய்யும்போது அந்தந்தப் பொருளைப்பற்றிய பாட்டைப் பாடிக்கொண்டு செய்யச் சொல்லவேண்டும்.

ஆகவே சிறுவர்க்குரிய பாடங்களைப்பற்றியும் விளையாட்டுகளைப்

பற்றியும் பாட்டுப்புத்தகம் ஒன்று இருப்பது நல்லது.