உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 36.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114

இசைத்தமிழ்க் கலம்பகம்

130. தமிழரின் ஐவகை அடிமைத்தனம் 'தாதாபாய் நவரோசி' என்ற மெட்டு

ஆரிய அடிமைத்தனம்

ப.

து. ப.

(ஆரிய)

அந்தோ தமிழர் முந்தே யமிழும்

ஐந்தறுவர் மந்திரிமார் ஆகமுழு அடிமைத்தனம்

அந்தமிழர் விடுதலையாய் அழகிய பெயர் பெறவைத்தனம்.

(உரைப்பாட்டு)

அடிமைத்தனத்தையே உரிமைத்தனமாய்க் கொள்ளுதல்

அவ்விரண்டின் வேறுபாடறியாமை

மடிமைத்தனத்தாற் பொறுத்தல் தன்னலம் பெறுதல்

மாறாயெதிர்த்தல் தமிழர் நிலையாமே

செந்தமிழைச் சிறையில் வைக்கும் செவ்வுரைஞர் வேலை நீக்கும் வந்தவரை வாழவைக்கும் வதிபழங்குடி மாளநோக்கும்

131. தன்மானமிழந்த தமிழன்

‘சங்கல்ப மெட்டிதோ மனசா' என்ற மெட்டு

பண் (கரகரப்பிரியை)

ப.

தன்மானமே தமிழன்பால் இல்லை

தாழ்வுணர்ச்சி யாலே தானேகெடும் ஒல்லை.

து. ப.

தென்மாநிலம் திகழ்தமிழ் எல்லை

திருவள்ளுவன் தெளிவித்தும் தென்சொல்லை.

(ஆரிய)

தாளம் - முன்னை

(தன்)