உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 36.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130

இசைத்தமிழ்க் கலம்பகம்

152. இன்று குடியரசிற்கேற்ற நிலையின்மை

'பேயாண்டி தன்னைக்கண்டு' என்ற மெட்டு

பண்

- (காம்போதி)

ப.

பாதிப் பேருங் கல்லாத போது குடியரசு

ஏதித் தமிழ்நாட்டிலே ஓது நடுவுறவே.

து. ப.

தாளம்

ஈரொற்று

காதிற்கினிய சொல்லைக் காதற்கிளவி யென்னப் பேதைத்தனமாய்ச் சொல்லிப் பேது மிகவுறவோ

தித்தியெக் காலுமென்று தேக்கவே தின்றுவிட்டால் தீக்குணம் போய்விடுமோ பேய்க்கரும்பான தெல்லாம்

(பாதிப்)

பித்தளைக்கும் பொன்னென்னப் பெட்பாக மெருகிட்டால்

பேக்கல்லாதவர் அதைப் பார்க்கத் தகுமோ சொல்லாய். (பாதிப்)

153. குடியாட்சிக் கூட்டுடைமை (Democratic Socialism) கூடாமை

>

காணாத கண்ணென்ன கண்' என்ற மெட்டு

ப.

குடியாட்சிக் கூட்டுடைமை

கொள்ளாதிடமே

படியாதார் நூற்றிற்கே யெண்

உ.1

பதின்மராகும் இந்நாட்டில்

குடியாட்சிக் கிடமில்லை குலப்பிரிவினையிற் கூட்டுடைமை

கூடுமென் றெண்ணல் மடமை

குலத்தை நீக்குங் கடமை

கொள்ளா விடமே.

(குடி)