உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 36.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154

இசைத்தமிழ்க் கலம்பகம்

182. கற்க வேண்டியவற்றைக் கசடறக் கற்றல்

(இசைந்த பண்ணிற் பாடுக)

தாளம் - முன்னை

1

ஆயிரம் பாட்டிற்கடி அறிந்தும் ஒன்றன் உருவும் அறியா திருந்தால்பயன் என்னே என்னே மாயிரு மொழிகளை மறுவறக் கற்ற லின்றி மாணவர்க் கிந்திஎதற் கின்னே இன்னே.

2

கல்வி கரையில்லாமல் கடலினும் விரிந்ததைக் கற்பவர் நாள்குறையும் எல்லை எல்லை செல்வ மெனச்சிறந்த செய்ய கலையிருக்கச் சிறுமொழி கற்கநாளும் இல்லை இல்லை.

3

ஆனையைப் போன்றேஒரு பூனையும் விலங்கேனும் ஆனையாமோ பூனையும் சொல்லும் சொல்லும் ஆங்கிலம் போன்றேஇன இந்தியும் மொழியேனும் ஆங்கிலமா யெங்ஙனம் செல்லும் செல்லும்.

4

இந்திய ரெல்லாருமே இந்தியப் பொதுமொழி

இந்தியென் றேற்றுக்கொண்ட துண்டோ உண்டோ மந்திரி மாரும்அதை முந்தியெண்ணா மல் இங்கே இந்தியைப் புகுத்துதல் நன்றோ நன்றோ.

183. இந்தியா ஒரு நாடன்மை 'சாமி விவேகானந்தா' என்ற மெட்டு வகை

இந்தியா ஒரே நாடென்று

இருந்த காலம் என்று

ப.

து. ப.

இங்கிலாந்தின் வலிமை மாட்சி இருந்ததாலே ஒருமை யாட்சி

(இந்தி)