உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 36.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

180

இசைத்தமிழ்க் கலம்பகம்

தொங்கும் எயில்கள் மூன்றெறிந்து தோற்ற வடவர் மண்டபம் தங்குபந்தர் வாயிலோடு தரவே கொண்டு சிறைஞராய் இங்குவந்த ஈழவர்கள் இலங்கு பொன்னிக் கரையிடக் கங்கைகொண்ட சோழன் வெற்றி கண்ட வேங்கைக் கொடியடா.

ப.

விற்கொடியிது விற்கொடியிது விற்கொடியிது தானடா விளம்புவான வரம்பன் கொண்ட வெல்கொடியிது காண்டா

குமரியிருந்து பனிமிகுந்த கோடுவரையும் ஒருமொழி தமிழிலாண்டு பாரதத்தும் தகுந்தசோறு வழங்கியே திமிரரான கனகவிசயர் திணிந்ததோளிற் கல்லையே

சுமைகொணர்ந்து சிறுமைகாணச் சொன்னசேரன் கொடியடா.

213. தமிழ் மீண்டும் தலைமை பெறல்

'கதர்க்கப்பல் கொடி தோணுதே' என்ற மெட்டு

பண் - (நாதநாமக்கிரியை)

தாளம் - (முன்னை)

பைந்தமிழ்த் தேவி பார் அதோ

ப.

பன்மொழிக் கழகத்தே பொன்மணி யரியணை

(பைந்)

பறவையுந் தோன்றுமுன்பு பலவெனும் ஊழிநின்ற பஃறுளிநாடு பின்பு பழையகற் காலங்கண்ட மொழியாகிப்

பல்கலையாம் வழிபோகிப்

பாண்டியன் வளர்த்த கன்னிப்

(பைந்)