உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 36.pdf/287

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவாணர் தமிழ்மொழிக்கும் நாட்டுக்கும் இடை விடாத நற்றொண்டாற்றி நம் அனைவரின் நிலை யினையும் உயர்த்தியவர். அவருடைய புலமையும், தெளிவும் துணிவுமிக்கது. தமிழ் மொழியின் தூய்மையும், வளமும் எத்தகையது என்பதனை ஆய்ந்தறிந்து தெரிவித்த பெருமகனாரிடம் தமிழிடம் பற்றுக் கொண்ட எவருக்கும் பெருமதிப்பு ஏற்படா திருக்க முடியாது. தமிழ்ப்பெருநூல்கள் தமிழரால் நன்கு கற்று உணரப்பட்டு, தமிழ்நெறியில் தமிழர் நின்று வென்றிடல் வேண்டுமென்பதில் தளராத விருப்பம் கொண்டோர்க்கெல்லாம் பாவாணரின் புலமை நம்பிக்கை தந்து வருகின்றது.

- பேரறிஞர் அண்ணா

தமிழ்மன்

சென்னை

குறக்கட்டவை

017 600

‘பெரியார் குடில்’

பி.11. குல்மொகர் குடியிருப்பு,

35, செவாலியே சிவாசி கணேசன் சாலை,

தியாகராயர்நகர், சென்னை - 17.