உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 37.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




X

சுட்டு விளக்கம் அல்லது அடிப்படை வேர்ச்சொல் ஐந்து

முதுபெருமொழிகளிலும் கலந்துள்ளன. இந்தியாவின் பழங்குடிகள் திராவிடரே. இவற்றை நோக்கும்போது, தமிழ்ச் சரித்திரம் இந்திய சரித்திரத்திற்கும் இந்திய ஐரோப்பிய ஒப்பியன்மொழி நூலுக்குமே அடிப்படையாகு மென்பது புலனாம்.

தமிழ் குமரிநாட்டில் தானே தோன்றிய மொழியாதலானும், திரவிடத்திற்குத் தாயாகவும் ஆரியத்திற்கு முதற்றாயாகவும் இருத்தலானும், சொல்லியல் திறவுகோலையும் மொழிநூல் திறவுகோலையும் தன்னகத்தேயே கொண்டுள்ளது. தமிழ் திரவிடத் தாயென்பது இப் பாகத்தின் பிற்பகுதியிலும், தமிழ்ச் சொல்லாக்க முறைகள் 'செந்தமிழ்ச் சொல்லியல் நெறிமுறைகள்' என்னும் நூலிலும் கூறப்படும்.

தமிழின் தலைமையை அறிதற்குத் தடைகள்

உலக மொழிகளுக்குள் தமிழ் தலைமையானதா யிருப்பினும், (1) சரித்திர மறியாமை, (2) சொல்லியலகாரதியின்மை, (3) முதுநூல் களிறந்துபட்டமை, (4) மொழிபற்றிய தவறான அரசியற் கட்சிக் கொள்கை, (5) கலவை மொழிநடை, (6) தமிழன் அடிமை யுணர்ச்சி, (7) தமிழ்ப் பற்றில்லாதார் கல்வி நிலையங்களிலும் ஆட்சி யிடங்களிலு மிருத்தல், (8) ஆராய்ச்சியின்மை, (9) மதப்பற்றினால் பிறமொழி தழுவல், (10) பெரும்பான்மைத் தமிழரின் கல்லாமை முதலிய காரணங்களால் தமிழின் பெருமை தமிழராலும் அறியப்படாமல் இருக்கின்றது. இந்திய சரித்திரத்தைத் தெற்கிருந்து தொடங்க வேண்டும் என்பதையும்; இந்திய நாகரிகம் திரவிடம் என்பதையும்; திரவிட உடலமைப்பைத் திரவிட மன்னர், தமிழ வேளிர், வேளாளர் முதலியார் முதலிய குலத்தினர் என்றிவரிடைத் தான் காணமுடியு மென்பதையும்; திரவிடனைக் காட்டுமிராண்டி யாகச் சரித்திர நூல்களிற் காட்டியிருப்பதும் கூறியிருப்பதும் பெருந் தவறென்பதையும்; ஆரியர் வருமுன்பே, அன்றன்று, பனிமலை தோன்றுமுன்பே, குமரிநாட்டில் சைவமும் (சேயோன் வழிபாடு), மாலியமும் (மாயோன் வழிபாடு) முறையே குறிஞ்சி முல்லைத் தமிழர் மதங்களாயிருந்தன என்பதையும்; உலகியலும் மதவியலும் பற்றிய திருந்திய பழக்கங்கள் இன்றும் தென்னாட்டிலேயே உள்ளன என்பதையும்; எந்நாட்டிலும் மக்களுள் தாழ்ந்தோர் உயர்ந்தோர் என இரு சாரார் இருப்பதுபோல் தமிழ்நாட்டிலும் தொன்று தொட்டு உள்ளனரென்பதையும்; அவருள் உயர்ந்தோரின்