உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 37.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சுட்டு வேர்ச்சொற்கள்

இகம்

=

13

இவ்வுலகம். இகபரம் என்னும் வழக்கையும் அகம் என்னும் சொல்லையும் நோக்குக.

ஈன்

இன்

இன்ன இன்னா, இனை (சுட்டு), ஈனோர் = இவ்வுலகத் தார். இன்ன, இனை, இனைய (உவமை). இன்ன (such) - சுட்டாச்சுட்டு. நெருங்கல்

கிட்டு - கிட்ட - கிட்டத்தட்ட. கிட்டு நெருக்கி.

=

அண்மைப்படு, நெருங்கு. கிட்டி

காலவிடைச்சொற்கள்: இன், இன்னும், இனி. இன் = இப்பொழுது. Cf.E.yet, A.S. git, gita. g = y. இன்னும் = இதுவரையும், இதன்மேலும். இனி = இதன்மேல்.

பிறிதுபொருள்: இன் - ஏன்

ஏனை. எ - டு: இன்னொன்று, ஏனோர். இதர என்னும் வடசொல் இகரச்சுட்டடியாய்ப் பிறந்ததே. A.S. other; E. other: (2) முன்னிலைப் பெயர்: முன்னிலைப் பெயர்கள் படர்க்கைப் பெயர்களை நோக்க அண்மைப் பொருள்களைக் குறித்தலின், அவை அண்மைச் சுட்டினின்று தோன்றின.

இன் - (யீன்) - நீன் (ஒருமை). ஈம்-(யீம்) - நீம் (பன்மை).

ஈங்கு முதலாயின தன்மைக் கண்ணும் ஆங்கு முதலாயின படர்க்கைக் கண்ணும் அடக்கப்பட்டன. (தொல்.சொல். 28, சேனா.)

(3) சிறுமைச் சொற்கள்: அண்மை இடுக்கத்தைக் குறித்தலின், இடுக்கமும் சிறுமையும் மென்மையும் பற்றிய சொற்கள் அண்மைச்சுட்டினின்று தோன்றின.

இடு – இடுகு, இடுப்பு, இடை (சிறுத்த இடம், சிறு சந்து). இடுக்கு (சிறு சந்து). இறுகு = சுருங்கிக் கடினமாகு.

இடுக்கு = சிற்றிடைப்படுத்து, நெருக்கு. இடுக்கி இடுக்கம். இட்டு இட்டிது = சிறியது. Cf. et, ette, ot. dim. suffixes. Ex.turret, ciga- rette, ballot.

இடர், இடுக்கண், இடும்பு இடும்பை. இவை இடுகிய அல்லது தளர்ந்த நிலைபற்றித் துன்பங் குறிக்குஞ் சொற்கள். இடும்பு = தொந்தரவு, குறும்பு, வம்பு.

இண்டு = சிறு சந்து. 'இண்டு இடுக்கு' என்னும் வழக்கை நோக்குக. இள் ள இளகு. இள் எள் எள்கு எஃகு. இளகினது எஃகு. ஒ.நோ: உருகினது உருக்கு.

இள

Gael, lag, feeble, A.S. las, feeble Goth. lasivs, weak, Ice. las, weakness, E. less, Celt., - W. Lag, loose, Gk. lagaros, slack, L. laxus, loose, E. lag, slack, lax loose. இளகு - இரங்கு.

11