உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 37.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




34

சுட்டு விளக்கம் அல்லது அடிப்படை வேர்ச்சொல் ஐந்து +

துள் = துளைசெய். துள் + ஐ - துளை.

A.S. duru, Gk. thura, Skt. dvar, E. door, L. fore.

து

துள் - தூள் = துளைக்கும்போது விழும் பொடி. தூள் - தூளி – தூசி. துள் தள், துளை, தோண்டு, வெட்டு. துள் துள்ளி - துளி - துளிர் - தளிர். துளி துண்டு, திவலை, சிறுபகுதி. துள்-துண்- துணி = வெட்டு, வெட்டப்பட்ட ஆடை. ஒ.நோ: அறு அறுவை = துணி. E. piece goods. துள் + து - துட்டு. துட்டு = துண்டு, காசு. ஒ.நோ: சல்லி = துண்டு, காசு. துண் - துணி - துணிக்கை. துண் = - துணுக்கு. துண்டு - துண்டி துண்டம் துண்ட (வ.). துன்- தூண்- ஸ்தூண (வ.). ஒ.நோ: பிள் - பிழம்பு = தூண். துணி - துமி. Gk.temno, to cut. தூள் தூளனம் (வ.).

துள் துரு - துருவு = துளைத்துச் செல், ஊடுசெல், உட்சென்று ஆராய். துருவ - A.S. thurh, E. through, Ger. durch, W. true, Skt. taras, L. trans, E. thorough, the longer form of through.

துருவு துப்பு = உளவு, துப்புத்துரவு என்பது உலகவழக்கு.

துள் - துண்பு - தும்பு. ஒ.நோ: தெள்பு - தெண்பு - தெம்பு. வள்பு - வண்பு வம்பு. (தெ.) = வளைவு. தும்பு = துளை, துளையுள்ளது, குழாய். தும்பி = குழாய் போன்ற முன்கை (proboscis) யுள்ள வண்டு, யானை, துளையுள்ள சுரை. தும்பு – தூம்பு = உட்டுளைப் பொருள், குழாய், ஒரு துளைவாத்தியம்.

Fr. L. tubus. E. tube.

=

தூம்பு + அல் – தூம்பல் = துளையுள்ள சுரை. தூம்பு -தூரம் = ஒரு முகத்த லளவை. தும்புக்கை (தும்பிக்கை) - தூம்பிக்கை = யானைக்கை.

துள் - துய் = துளை போன்ற வாயிலிடு, உண், நுகர். துய் - து - தூ= உண். து + பு - துப்பு = உணவு. தூ ஊ ஊன் = உண்ணும் இறைச்சி, உடம்பு. துள் துல்

துன் துன்பு

துன்பம் = துளைத்தல், வருத்துதல், இடர்.

துளைத்தல் = வருத்துதல்.

-

துள் - தொள் = பொருந்து, துளை,தோண்டு. தொள் + அல் – தொள்ளல் = துளை. தொள் + ஐ - தொள்ளை - தொளை. தொள் + தி - தொண்டி (தொளை). தொள் + தை - தொண்டை = உணவு செல்லும் குழி.

தொள் + இ - தொளி (நீருள்ள நிலத்தைத் தோண்டின சேறு). தொள்ளம் = சேறு. தொள்ளல் தொய்யல் = சேறு, உழவு. தொள் + இல் + (தொளில்) தொழில் = நிலத்தைத் தோண்டிச் செய்யும் பயிர்வேலை, வேலை. தொள் - தொழு = தொழில் செய், ஊழியஞ் செய், வழிபடு.ஒ.நோ: சேவி = தொழில் செய் (to serve), ஊழியஞ் செய், வழிபடு. தொழு தொழும்பு = ஊழியம், அடித்தொண்டு. தொழும்பன் (அடித்தொண்டன்), தொம்பன் = கீழ் வினைஞன். தொள் + து - தொண்டு = தொளை, தொழில், அடித்தொழில். தொண்டு + அன் - தொண்டன். தொள் A.S.tilion, to till, E. till.

ஊள