உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 37.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பின்னிணைப்பு

75

பின்னிணைப்பு III

குறிப்பொலிகளும் குறிப்புச் சொற்களும் (Onomatopoetics and Frequentatives)

(1) ஒற்றைக்கிளவி. எ-டு: சடார், வெள்ளென, சரட்டென்று, பொதுக்கென்று.

(2) இரட்டைக் கிளவி. எ-டு : கலகல. சுருசுரு. மடமட்.

(3) எதுகைக் கிளவி. எ-டு : சட்டுப்புட்டு (சட்புட்), சடுகுடு, ஆலே பூலே, காமாசோமா.

(4) அடுக்குக் கிளவி. எ-டு: பட்டுப்பட்டு (பட்பட்), கதக்குக் கதக்கு, கணீர் கணீர்.

(5) இரட்டித்த கிளவி. எ-டு : செக்கச்செவேர், கன்னங்கரிய.

குறிப்பு: (1) இங்குக் கூறிய கிளவிகளெல்லாம் எனவென் னெச்சமும் என்றென் னெச்சமுமாகும்.

(2) வெள்ளென, சுருசுரு முதலிய சொற்கள் சுட்டடித் தோன்றி யவை: சடார், கலகல முதலியவை ஒலியடித் தோன்றியவை. (3) அடிஅடியென் றடித்து, குறுகுறு நடந்து என்பவை இக்காலத்தில் அடுக்குத்தொடர்களாயிருப்பது போல, மினுமினு, கலகல என்பவும் முதற்காலத்தில் அடுக்குத் தொடர்களா யிருந்தன.

(4) வெடி, குத்து முதலிய சொற்கள் சுட்டும் ஒலியுமாகிய ஈரடிப் பிறப்பின.