உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 38.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




26

சென்னைப் பல்கலைக் கழக தமிழகராதியின் சீர்கேடு

சென்னை யகராதிப் பதிப்பாசிரியர் திரு. வையாபுரிப் பிள்ளையவர்கள் வரைந்துள்ள முன்னுரையில், அவ் வகராதி மற்றெல்லா வகராதிகளினுஞ் சிறந்ததெனக் காட்டுதற்கு எடுத்துக்கொண்ட இரு சொற்களுள் ஒன்றான வரி என்பதற்கு, அரசிறை யென்னும் பொருளில் பலி யென்னும் வடசொல்லை வலமாகக் குறித்துள்ளார். இவ் விருசொற்கும் சொல்லளவில் ஒரு தொடர்பில்லை. வரி என்பது வரித்தல் என்னுஞ் சொல்லினின்று பிறந்தது. வரித்தல்- சுற்றிக்கட்டுதல், உழவன் பொலிக்களத்தில் ஆறிலொரு பங்குத் தவசத்தை அரசிறையாகக் கோணிப்பையிற் கட்டுதல்.

மேற்குறித்த சொற்றொகுதியுள், உவமை யென்பது 1959ஆம் ஆட்டைத் தென்றல் மலரிலும், முகம் என்பது அவ் வாட்டைப் பொழிலிலும், தென் சொல்லென விளக்கப்பட்டுள. ஆண்டுக் காண்க. இங்கு, ஆயிரம், உலகம் ஐயன், வடவை, என்னும் நாற்சொல்லே விளக்கப்பெறும். ஏனையவற்றை என் தமிழ் வரலாற்றிலும் வடமொழி வரலாற்றிலும் கண்டு கொள்க.

அயிர்=நுண்மணல். அயிர்

(அயிரம்)-ஆயிரம் = மணல்போற் பெருந் தொகை (1000). ஒப்புநோக்க: நூறு = பொடி, மா, பத்துப்பத்து. அயிரம் - அசிரம் - ஹஸ்ர. ஸ+ஹஸ்ர ஸஹஸ்ர (வ.). அசிரம் - ஹசார் (hazar, H.) hazar (P.). வடமொழியில் ஸஹஸ்ர என்னும் சொல்லிற்கு வேர்ப்பொரு ளில்லை.

சொல்லாக்கத்தில், உயிர்முதற் சொற்கள் மெய்ம்முன்னிட்டு உயிர்

மெய்ம்முதற் சொற்களாவது இயல்பு.

எ-டு: அனல்

கனல்

எண்

சேண்

இமை

நிமை

உம்பர்

ஊப்பர் (இ.) - super (L.)

யகரம் சகரமாகத் திரிவது பெருவழக்கு.

எ-டு: பயறு

பெசறு (க.)

உசிர் (க.)

உயிர்

வயிறு

பசிறு (க.)

யகர மெய் சிறுபான்மை வகரமெய்யாகவும் சொல்லிடைத் திரியும்.

எ-டு: நீயிர்

நீவிர்

இம் மூவகைத் திரிபும் பெற்று, ஆயிரம் என்னுஞ் சொல் கன்னடத்தில் சாவிர சாசிர என வழங்குகின்றது. இதை யறியாது, பரோவும் எமனோவும் தொகுத்த திரவிடச் சொல்லியலகராதியில், ஸகஸ்ர என்னும் வடசொல்லே ஆயிரம் என்னும் தமிழெண்ணுப் பெயருக்கு மூலமாகக் காட்டப்பட்டுள்ளது. ஸகஸ்ரம் என்பது ஸாவிர எனத் திரிவதைவிட, ஆயிரம் என்பது ஸாவிர எனத் திரிவதே இயல்பு. தென்னாட்டுத் திரவிடச் சொல் ஸகஸ்ர என்னும் வட