உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 38.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




வேர் வழுக்கள்

31

வேத ஆரியம் வழக்கற்றுப் போனபின், அதனொடு ஐம்பிராகிருதங் களையும் கலந்து சமற்கிருதம் என்னும் இலக்கிய மொழியை அமைத்தனர். பிராகிருதம் முந்திச் செய்யப்பட்டது. சமற்கிருதம்-நன்றாய்ச் செய்யப்பட்டது. ஆகவே, சமற்கிருதத்திற்கு முந்தியது பிராகிருதம், பிராகிருதத்திற்கு முந்தியது திரவிடம். திரவிடத்திற்கு முந்தியது தமிழ். இவ் வுண்மையை மறைத்துப் பின் வருமாறு பல தமிழ்ச்சொற்கட்குத் தலைகீழாய் மூலங்காட்டப்பட்டு சென்னையகராதியிலுங் காட்டப்பட்டுள்ளது. எ-டு: சமற்கிருதம் பிராகிருதம்

வருகின்றது;

தமிழ்

வ்ருத்த >

வட்ட >

வட்டம்

ஸ்நேக >

நேயம் >

நேயம்

அய்ய >

ஐயன்

கட்ட>

கட்டை

கம்ப >

கம்பம்

இப் பட்டியைக் கீழ்வருமாறு தலைமாற்றுக

தமிழ்

பிராகிருதம்

வட்டம் >

வட்ட >

கம்பம்

கம்ப

சமற்கிருதம்

வ்ருத்த

அய்ய, கட்ட, கம்ப என்னும் பிராகிருதச் சொற்கட்கு, ஆர்ய, காஷ்ட்ட, ஸ்தம்ப என்னும் சமற்கிருதச் சொற்களை, முறையே, மூலமாகக் காட்டுவர். அது முழுவழு. இதன் விரிவெல்லாம் என் வடமொழி வரலாறு என்னும் நூலுட் கண்டு கொள்க.

இனி, சில தமிழ்ச்சொற்களைத் திரவிட வுருதுச்சொற்களின் திரிபாகவுங் காட்டுவர்.

எ-டு: கும்பு < T. கும்பு (கூட்டம்), வாங்கா – வங்கா < U. பாங்கா.

<

6. கூட்டுச்சொல்லை வழுப்படப் பிரித்தல்

ஒருவர் மெலிந்து தோலும் எலும்புமாய்ப் போவதை, உடக்கெடுத்துப்போதல் என்பது மரபு. உடக்கு-தோலும் எலும்புமான நிலை. உடக்கு எடுத்தல் உடக்கெடுத்தல். இதை உடல் கெடுத்தல் என்று பிரிக்கின்றது அகராதி.

மாலை நேரத்தில் கதிரவன் இறங்குவதைப் பொழுது சாய்தல் என்பது மரபு. பொழுது சாய வந்தான் என்பது இன்றும் வழக்கமாயிருக்கின்றது. பொழுது சாயும் மாலை சாயுங்காலம் எனப்படும். இதைச் சாயுந்தரம் என்றும் சொல்வர். சாயுங்காலம் என்பது சாயங்காலம், சாய்ங்காலம் என்றும், சாயுந்தரம் என்பது சாயந்தரம், சாய்ந்தரம் என்றும் மருவும், வடமொழியாளர் சாயங்காலம் என்பதைச் சாயம் காலம் எனப் பிரித்து, சாயம் என்னும் சொல்லை மாலை என்னும் பொருளில் ஆண்டுகொண்டனர். அதன்பின், சாயம் (ஸாயம்) என்னும் வடசொல்லினின்றே சாயங்காலம் என்னும் தமிழ்சொல் வந்ததென்று சொல்லவுந்