உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 38.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இலக்கண வழுக்கள்

37

VI. அகராதியமைப்பு வழுக்கள்

1. ஒரேயளவான எழுத்தால் எல்லாச் சொற்களையுங் குறித்தல்

வின்சிலோ (Winslow) அகராதியில், அடிப்படைச் சொற்கள் பெரிய எழுத்திலும், அவற்றினின்று திரிந்துள்ள தனிச்சொற்களும் கூட்டுச்சொற்களும் சிறிய எழுத்திலும், அச்சிடப்பட்டிருக்கின்றன. அதுவே சரியான முறையாம். சென்னையகராதியில் அஃதன்றி, எல்லாச் சொற்களும் சிறிதும் வேறுபாடின்றி ஒரேயளவான எழுத்தில் அச்சிடப்பட்டிருக்கின்றன. இதனால், ஆராய்ச்சியில்லா தார் அல்லது புலவரல்லாதார் சொற்றிரிவு முறையை அறியவும், இயற் சொல்லையும் திரிசொல்லையும் பிரித்துணரவும் இயலாதிருக்கின்றது.

2. பிறந்தையின்கீழ் இனங்களையும் இனத்தின்கீழ் வகைகளையும் காட்டாமை வின்சிலோ அகராதியில், பருத்தி என்னும் சொல்லின்கீழ், காட்டுப்பருத்தி, செம்பருத்தி, தாளிப்பருத்தி, பட்டுப்பருத்தி, பூப்பருத்தி, பேய்ப்பருத்தி, மலைப் பருத்தி, வெண்பருத்தி, வேலிப்பருத்தி முதலிய பலவகைகள் காட்டப்பட்டுள்ளன. இங்ஙனமே பிற பொருள்வகைகளும் அவ்வவ்விடத்திற் காட்டப்பட்டுள்ளன. இம் முறையினால், ஒரு பொருளின் வகைகளையெல்லாம் ஒரேயிடத்தில் ஒருங்கே காணமுடிகின்றது. விடுபட்டுப்போன வகைகளையும் உடனே கண்டுகொள்ளலாம்.

சென்னையகராதியில், எல்லாப் பொருள்களையும் அவற்றைக் குறிக்கும் சொற்களின் அகர வரிசைப்படி குறித்திருப்பதால், ஒரு பொருளின் வகைகளைக் காண்பதற்கு எல்லா மடலங்களையும் புரட்டவேண்டியிருக்கின்றது. இது இயலாத செயல். அதோடு, விடுபட்டுப்போன வகைகளையும் எளிதாய் அறிந்து கொள்ளமுடிவதில்லை. எடுத்துக்காட்டாக, அவரை வகைகளைச் சொல்லலாம். ஆரால்மீன் அவரை, ஆனைக்காதவரை, கொழுப்பவரை முதலிய வகைகள் சென்னையகராதியிற் குறிக்கப்படவில்லை.

இங்ஙனமே, உருண்டையரம், கத்தியரம், சீட்டியரம், பூவரம், பொந்தவரம், துகரம், முள்ளரம் முதலிய அரவகைகள் விடப்பட்டுள்ளன.