உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 38.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




58

சென்னைப் பல்கலைக் கழக தமிழகராதியின் சீர்கேடு

அதையடுத்து 6-7-1956 என்னும் பக்கலிட்டு வந்த திருமுகத்தில், நான் பதிவாளரிடம் சென்று வேலையை ஒப்புக்கொள்ள வேண்டுமென்றும், மொழிநூல் துறைத் தலைவராகப் பேராசிரியர் ஒருவர் அமர்த்தப் பெறுவாரென்றும். அத் துறை வேலையை வழிப்படுத்தப் பெயர் பெற்ற தமிழறிஞரைக் கொண்ட ஒரு குழுவும் அமைக்கப்பெறு மென்றும், குறித்திருந்தது. யார் யார் அக் குழுவுறுப்பினர் என்பது அன்று தெரிந்திலது. ஆயினும் ஒருசிலரை உய்த்தறிந்து கொண்டேன்.

எனக்கு அண்ணாமலை பல்கலைக்கழக வேலையமர்த்தம் கல்வியாண்டு தொடங்கியபின் ஆனதினால், பள்ளிகளிற் சேர்ந்து படித்துக்கொண்டிருந்த என் மக்களை உடன் கொண்டுசெல்ல வியலாமல், அண்ணாமலை நகருக்குத் தனித்தே செல்ல நேர்ந்தது. சேலம் நகராண்மைக் கல்லூரியினின்று விடுவிப்புப் பெறச் சின்னாட் சென்றுவிட்டமையால், 12-7-56 அன்றே அ.ம.ப.க.க. வேலையை ஒப்புக்கொள்ள இயன்றது.

அண்ணாமலைநகர் சென்றவுடன் பல்கலைக்கழக வீடு எனக்குக் கிடைக்கவில்லை. அது கிடைக்கும் வாய்ப்பு, பேராசிரியர், துணைப்பேராசிரியர், விரிவுரையாளர் ஆகிய முத்திறத்தார்க்கும், முறையே, தலையிடை கடையாம். எனினும், துணைக் கண்காணகர் திரு. நாராயணசாமியார் கண்ணோட்டத்தாலும் பதிவாளர் அன்பாலும், விருந்தினர் விடுதியில் எனக்கு ஏந்தான (வசதியான) இடங் கிடைத்தது. அதோடு ஒரு கிழமைக்குள், கொற்றவன்குடி விரிவுரையாளர் குடியிருப்பு வரிசையில் 7ஆம் எண் உறையுளும் ஒதுக்கப்பட்டது. அது வெறுமையானவுடன், அதிற் குடியமர்ந்து கொண்டேன். ஓராண்டு தனித்திருக்க நேர்ந்ததினாலும், உண்டிச்சாலை உணவு என் உடம்பிற் கொவ்வாமையாலும், முதலாண்டு முழுதும் நானே சமைத்துண்டேன். கைச்சமையல் உடல் நலத்திற் கேற்றதேனும், நான் விரும்பியவாறு முழு நேரமும் பல்கலைக்கழகப் பணிக்குச் செலவிட முடியாது போயிற்று. 12.9.1956அன்று துணைக் கண்காண கரிடமிருந்து ஓர் ஓலை வந்தது. அதன் உள்ளடக்கம் (மொழிபெயர்ப்பு) வருமாறு:

“இப் பல்கலைக்கழகத்திற் புதிதாய் ஏற்படுத்தப்பட்டுள்ள ஒப்பிய ல் மொழித் துறையைச் சேர்ந்த வாசகர்க்கு அறிவுரை கூறவும், வழிகாட்டவும், அவர் பணியைப்பற்றி உசாவவும் ஒரு திறவோர்குழு இப் பல்கலைக்கழகத்தில் அமைக்கப் பட்டுள்ளதென்று நான் கூற வேண்டியுளது. அக் குழுத் தலைவர் காளிக்கோட்ட மேலை வங்கச் சட்டமன்றத் தலைவர் பண்டாரகர் (எசு. கே.) சட்டர்சி. இப் பல்கலைக்கழக ஒப்பியல் மொழித்துறை வாசகரான திரு. ஞா. தேவநேயப் பாவாணர், அக் குழுவின் உறுப்பினரும் செயலாளருமாவார். ஏனையுறுப்பின ராவார் :

பண்டாரகர் (எசு.எம்.) கத்ரே (எம்.ஏ.பி.எச்.டி.), இயக்குநர், தெக்காணக் கல்லூரி, பட்டக் கல்விப் பின்னை ஆராய்ச்சிக்களரி, பூனா – 6.

-

திரு (ஏ.) சுப்பையா அவர்கள், துணைத் தலைவர், தமிழ்ப் பண்பாட்டுக் கலைமன்றம், தெர்லிங் சாலை, நுங்கம்பாக்கம், சென்னை.

பேரா. ரா.பி. சேது அவர்கள் (பி.ஏ.,பி.எல்.), தமிழ்ப் பேராசிரியர், சென்னைப் பல்கலைக் கழகம், சென்னை.