உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 38.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




என் அண்ணாமலை நகர் வாழ்க்கை

65

காட்சியளிக்கத் தொடங்கினவென்று சொல்ல வேண்டும். சமற்கிருதச் ‘சபா பழந்தமிழில்' 'அவை' என்று திரிந்ததைக் கண்டபோது திடுக்கிட்டுவிட்டேன். இங்ஙனமே, சந்தி, சகசிர, [சகஸ்ர], அச [அஜ], பூர்வாசாட சிராவண [ஸ்ராவண], காவ்ய, தர்ம, கோபால, கன்யகா, தூணா, [ஸ்தூணா], இசுத்தி [ஸ்த்ரீ], துலசீ, லோக்க, பிராமண [ப்ராஹ்மண], துரோணீ [த்ரோணீ], சிநேக் [ஸ்நேஹ], தேச முதலிய நூற்றுக்கணக்கான சமற்கிருதச் சொற்களும் பெயர்களும் அதேபோல் வடிவு மாற்றப்பட்டும், அவ் வடிவு மாற்றத்தில் அந்தி, ஆயிரம், அயன், பூராடம், ஆவணி, காப்பியம், தருமம், கோவலன், கண்ணகி, தூணம், தி, துழாய், உலகு, பார்ப்பான்,தோணி, நேயம், தேயம் என்பன போல் வடிவு மறைந்தும், உள்ளன. “யோ தேவ-நாமான் றகிலானி தகுதே” பரம் பொருளே கடவுளின் பல்வேறு பெயர்களாலும் மக்களிடை வழங்கும் வெவ்வேறு தெய்வங்களாலும் அறியப்படுகின்றது. ஆகையால், விட்டுணுவை மால் அல்லது மாயோனிலும், குமாரனை முருகன் அல்லது சேயோனிலும், துர்க்கையைக் கொற்றவையிலும், வேறு சில தேவரையும் தேவியரையும் தென்னிந்தியாவில் வழங்கும் அவரின் புதுப் பெயர்களிலும் கண்டு மகிழ்ந்தேன். கருத்துலகும் சமயக் காட்சியுலகும் முற்றும் ஒத்திருந்தன. இவை சமற்கிருத இலக்கணத்திற்போல் பிராமண இந்து மதத்தையும், தழுவியவை. இவற்றிற்கு வேதங்கள் அடிப்படை. இவற்றைச் சார்ந்தவை வேள்வியும் தீ வளர்ப்பும், மலர்ப் பூசையும் தெய்வ வழிபாடும், நாற்பெருங் குலமும் நால்வகை வாழ்க்கை நிலையும் பற்றிய பிராமணக் கருத்துகளும் ஆகும். இந் நாற்குலமும் நால்வகை நிலையும் பண்டைத் தமிழகத்தாரால் ஒப்புக்கொள்ளப்பட்டிருந்தன. ஒரு கால், வடஇந்தியா விற்போல் அவை அடைந்த வளர்ச்சியில் அவரின் ஒத்தாசையும் பெற்றிருக்கலாம். இனி அவற்றொடு சமண புத்த மதங்களும் தமிழகத்திருந்தன. வினையும் [கர்ம] உலக வாழ்க்கையும் [ஸம்ஸார] பற்றிய பொதுவான பட்டாங்குநூற் கருத்துகளும் [திருவள்ளுவரின் உடன்பிறப்பாட்டியரான ஔவையாரால் ஒரு பெரு வழக்கான வெண்பாவில் மிகச் சுருக்கமாகவும் அழகாகவும் இயல் வரையறுக்கப்பட்ட] அறம் பொருளின்பம் வீடு [தர்மார்த்த காம மோக்ஷ] என்னும் நாற்பால் [சதுர்வர்க்க] பற்றிய ஏடல்களும், வேறுபல அனைத்திந்தியக் கருத்துகளும் அங்குள்ளன. இந்தியாவின் தலைசிறந்த செவியறிவுறூஉச் செய்யுளான திருக்குறள் முப்பாலை (திரிவர்க்க) மட்டும் எடுத்துக் கூறியது, தக்கதே என்று எனக்குப் பட்டது, அதன் ஆசிரியரான பேரறிவர் தம் அறிவுடைமையால், நாலாம் பாலாகிய வீட்டைப்பற்றிக் கூறாது, அதுபற்றிய கருத்தை, காணப்படாத மெய்ப்பொருளை அவரவர் அடையும் வழிக்கேற்பத் தனிப்பட்டவர்க்கு விட்டுவிட்டார். ஒருவன் தன் பாட்டிக்கு (நூல் நூற்கக்) கற்றுக் கொடுப்பது அடாச் செயலே. கொல்லத் தெருவில் ஊசிவிற்க வேண்டியதில்லை. நெடுநாளுக்கு முன் என் மனத்தில் உரத்துப்பட்டது என்னவென்றால். பழந் தமிழிலக்கியம் மிக மிக இன்பந்தரும் கூறுகளிற் சிலவற்றை அமைக்கும் வெளிப்படையானவும் மேற்பட்டுத் தோன்றுவனவுமான பல புது முதன்மைக் குறிப்புகளைக் கொண்டிருப்பினும், சமற்கிருதத்தினின்றும்