உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 39.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கருமம் தமிழ்ச் சொல்லே

99

என்னும் சொல்லும், ஆடவனைக் குறிக்கும் மகன் என்னும் சொல்லும் சேர்ந்த கூட்டுச் சொல்லாகும்.

கருமகன் - கருமான் - கருமன்

கொல்லன் (பிங்.)

=

கருங்கொல் இரும்பு (சூடா.)

கருங்கொல்லன் = = கருமான். கருமகன் = கொல்லன். “கருமகக் கம்மியன்" (கம்ப. பம்பா. 37) கருமம் என்னும் சொல்லினின்று கருமகன் என்பது தோன்றியிருப்பின், 'கருமக் கம்மியன்' என்று மிகைபடு சொல்லாற் குறிக்க வேண்டியதில்லை.

இனி, கருமையென்னுஞ் சொற்கு வலிமைப் பொருளும் (புறம். 2; சிலப். 5, 29) இருப்பதால், 'கருங்கைக் கொல்லன்' (சிலப். 5, 29) என்னும் தொடரைச் சான்றாகக் கொண்டு, கருமகன் என்பதற்கு வலியவன் அல்லது வன் செயலன் என்று பொருளுரைக்கவும் இடமுண்டு. ஆயினும், அஃது அத்துணைச் சிறப்பும் பொருத்த முடையதன்று.

கருமான் என்பது, செம்மான் (shoemaker) என்பதனொடு நிறம் பற்றி முரண்பட்டது. செம்மகன் - செம்மான்.

ஒ.நோ: blacksmith x white smith (worker in tin).

செம்மான் என்பதை, Carman (S) என்னும் தோற் பெயரின் திரிபாகச் சென்னைத் தமிழகராதி குறித்திருப்பது தவறாகும்.

cf. E. tan. to convert raw hide into leather, to make brown by exposure to sun.

ஒரு குலத்தைக் குறிக்கும்போது, பலர்பாற் பெயரொடு அகரச் சாரியை சேர்த்துக் குறிப்பது தமிழர் வழக்கம்.

எ-டு டு : ஒருமைப் பெயர்

தட்டான்

செக்கான்

வண்ணான்

பன்மைப்பெயர்

தட்டார்

செக்கார்

வண்ணார்

குலப்பெயர்

தட்டாரக்குலம்

செக்காரக்குலம்

வண்ணாரக்குலம்

இம்முறைப்படி, கருமான் சொல்லினின்று கருமாரக் குலம் என்பது அமையும். இதை அடிப்படையாகக் கொண்டு கொல்லன் பெயர் Karmara என்று இருக்கு வேதத்தில் அமைந்ததாகத் தெரிகின்றது.

செய்தலைக் குறிக்கும் கரு என்னும் வினைமுதனிலை, வடமொழி யில் கரு (kr) என்றும், இலத்தீனில் (cres) என்றும் நிற்கும். ஓர் இயல்பான வேர்ச்சொல் உயிர் முதலாய் அல்லது உயிர் மெய்ம்முதலாய் இருக்குமே யன்றி, மெய்ம்முதலாய் இராது. கர்ம, கர்ண, கர்த்தா, காரண, கார்ய முதலிய திரிசொற்களெல்லாம், வடமொழியிலும் உயிர் மெய்ம் முதலாயே யிருத்தல்

காண்க.