உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 39.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எது தேவமொழி?

(2)

ஆற்றல் அழியுமென் றந்தணர்கள் நான்மறையைப் போற்றியுரைத் தேட்டின் புறத்தெழுதார் - ஏட்டெழுதி வல்லுநரும் வல்லாரும் வள்ளுவனார் முப்பாலைச் சொல்லிடினும் ஆற்றல்சோர் வின்று.”

என்று கோதமனாரும்,

ஓதற் கெளிதாய் உணர்தற் கரிதாகி

வள்ளுவர் வாய்மொழி மாண்பு.'

101

என்று மாங்குடி மருதனாரும், கூறியவையே. தமிழொலி மென்மைக்கும் சமற்கிருதவொலி வன்மைக்கும் போதிய சான்றாம்.

(3) தமிழ் தென்னாட்டு மொழிகட்கெல்லாம் தாயாயிருப்பது போன்றே, சமற்கிருதம் வடநாட்டு மொழிகட்கெல்லாம் தாய் என்றொரு தவறான கருத்து நெடுங்காலமாக நிலவி வருகின்றது. ஒரு காலத்திலும் உலக வழக்காய் வழங்காத அரைச் செயற்கையான இலக்கியக் கலவைமொழி, எங்ஙனம் தாய்மொழியாயிருத்தல் கூடும்? ஒரு மொழி முதற்கண் தனிமொழியா யிருந்தாலன்றோ பின்னர்த் தாய்மொழியாயும் அமைதல் கூடும்! தமிழ், திரவிட மொழிகட்குத் தாயும், ஆரிய மொழிகட்கு மூலமுமா யிருக்கும்போது, அவ் வாரிய மொழிகளுள் ஒலியளவில் முதுவளர்ச்சி யடைந்த இலக்கியச் செயற்கைக் கலவை மொழியாகிய சமற்கிருதம் எங்ஙனம் உண்மையில் பன்மொழித் தாயாயிருத்தல் ஒல்லும்?

(4) கண்ணு தற்பெருங் கடவுளும் கழகமோ டமர்ந்து பண்ணு றத்தெரிந் தாய்ந்தவிப் பசுந்தமிழ் ஏனை

மண்ணி டைச்சில இலக்கண வரம்பிலா மொழிபோல் எண்ணி டைப்படக் கிடந்ததா எண்ணவும் படுமோ”

என்று பரஞ்சோதி முனிவர் தருக்குமாறு, இலக்கணச் செம்மையும் வேறெம் மொழியினுமில்லாத பொருளிலக்கணமுமுடைய தமிழே மொழிப் பண்பாட்டில் தலைசிறந்ததாம்.

(5) பெருஞ் சொல்வள முடையதும் பிறமொழித் வேண்டாததும் தனித்து வளர்ந்தோங்க வல்லதும் தமிழ் ஒன்றே,

அன்றியும் தமிழ்நூற் களவிலை அவற்றுள் ஒன்றே யாயினும் தனித்தமி ழுண்டோ?"

துணை

என்னும் சுவாமிநாத தேசிகர் கூற்று. மொழியாராய்ச்சி யில்லாத இருட்காலத் தெழுந்ததாதலின், அது இற்றைக்குப் பொருளற்றதென விடுக்க.

சமற்கிருதத்திற்குள்ள சொல்வளம் பன்மொழிச் சேர்க்கையால் உண்டானதாதலின், அதுவும் சிறப்பிலதென்று விடுக்க.

(6) “பாட்டுரை நூலே வாய்மொழி பிசியே”

‘மறைமொழி கிளந்த மந்திரத் தான'

55

(1336)

(1421)