உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 39.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சமற்கிருதவாக்கம்

-―

=

சொற்கள்

=

107

உருத்தல் தோன்றுதல். உரு தோற்றம், வடிவம், வடிவுடைப் பொருள். உரு உருவு - உருபு = வேற்றுமை வடிவம், அதைக் காட்டும் இடைச்சொல். ஒ.நோ: அளவு - அளபு. உருவு - உருவம். தமிழிலக்கணம் ஆ ஆரிய வருகைக்கு எண்ணாயிரமாண்டு முற்பட்டது.

உலவுதல் = வளைதல், சுற்றுதல். உலா = நகரைச் சுற்றி வரும் பவனி. உலக்கை = உருண்ட பெரும்பிடி. உலம்வா - உலமா. உலமருதல் = சுழலுதல். உலவு - உலகு = உருண்டையாயிருப்பது அல்லது சுற்றி வருவது. ஒ.நோ: கொட்குதல் = சுற்றி வருதல். கொள் - கோள். உலகு - உலகம். லோக் என்னும் வடசொல், பார்த்தது அல்லது பார்க்கப்படுவது என்னும் பொருளது. அது நோக்கு என்னும் தென்சொல்லின் திரிபாம்.

இனி, உலகம் வட்டமாயிருக்கும் ஞாலம் (பூமி) என்றுமாம். ஒ.நோ: “கடல்சூழ் மண்டிலம்” (குறுந். 300).

=

உகரம் உயரத்தைக் குறிக்கும் வேர்ச்சொல். எ-டு: உக்கம் = தலை, உவ்வி = தலை, உத்தி = ஒருவகைத் தலையணி. உச்சி, உம்பர், உவண், உயர். உவண் மேலிடம். உவணை = தேவருலகம். உவணம் = உயர்ச்சி, பருந்து, கலுழன், கழுகு. பருந்து உயரப் பறக்கும் பறவைகளுள் ஒன்று “உயரவுயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகுமா?” என்பது பழமொழி. உவணம் - சுவணம் = பருந்து, கலுழன். கழுகு. உவணம் (சுவணம்) முல்லை நிலத்துப் பறவையாதலால், அந் நிலத்தெய்வமாகிய மாயோனுக்கு ஊர்தியாகக் குறிக்கப்பெற்றது.

+

சுவணம் என்னும் சொல்லை வடமொழியாளர் சுபர்ண என்று திரித்துப் பின்பு சு பர்ண என்று பிரித்து, நல்ல இலை, அழகிய இலையுள்ளது, அழகிய இலை போன்ற சிறகையுடையது, என்று பொருந்தாப் புளுகலாகக் கரணியங் காட்டுவர். கடுகளவேனும் பகுத்தறி வுடையார், நகைச்சுவையான இச் சொற்பொருட் கரணியத்தைக் காணின் நகாதிரார்.

=

கும்முதல் திரளுதல். கும் குமர் குமரன் = திரண்டவன், இளைஞன். குமரி = திரண்டவள், இளைஞை. ஒ.நோ: L. virginem, E. virgin from virgo to swell. விடைத்தல் = பருத்தல். விலங்கினத்திலும் பறவை யினத்திலும் திரண்டு இளைமையா யிருப்பவற்றை விடையென்பது மரபு. ஆடு, மாடு, குதிரை, மான், பூனை, கோழி, பாம்பு முதலியவற்றுள், திரண்டு இளமையாயிருப்பவற்றை விடையென்பது இருவகை வழக்கிலுமுண்மை கண்டுகொள்க. விடை விடலை = இளங்காளை, மறவன் (வீரன்), இளைஞன், 16 முதல் 30 ஆண்டு வரைப்பட்டவன், திண்ணியோன். இளநீரை லையென்பது நாஞ்சில் நாட்டு வழக்கு உயிரினங்களிற் பெரும்பாலும் ஆண் பருத்திருப்பதால், விடையென்பது இளவாணையே சிறப்பாகக் குறிக்கும். குமர் என்னும் சொல் உயர்திணையில் இருபாற் பொதுவாம். குமரி