உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 39.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சமற்கிருதவாக்கம்

-

சொற்கள்

109

தண்டு = தடி, படகு வலிக்குங் கோல், தண்டினால் தாங்கும் பல்லக்கு, தண்டுபோல் திரண்ட படை.

ஒ.நோ: club = stick association. staff= stick, body of officers. தண்டு - தண்டன் = கோல்,

தள் - தட்டு, தட்டை = சோளப் பயிர் போன்றவற்றின் திரண்ட அடி. தண்டு - தண்டி = பருமன் மிகுதி, தடி, வீணைக் கோடு, தடித்த மூங்கில் தாங்கும் பல்லக்கு. தண்டி தண்டியம் = தாங்கும் கட்டை. தண்டி தண்டிகை = பல்லக்கு. தண்டி - தண்டியல் = தண்டிகை. தண்டித்தல் = பருத்தல், தடியால் அடித்து ஒறுத்தல், ஒறுத்தல். தண்டி - தடி. ஒ.நோ: பிண்டி - பிடி, கண்டி - கடி, மண்டி - மடி, அண்டி - அடி. இது தொகுத்தல் திரிபு.

தடித்தல் = பருத்தல். தடியன் = பருத்தவன், பருத்த பூசணிக்காய். தடி தடிப்பு தடிப்பம். தடி தடிம்பு தடிம்பல்.

-

தண்டு - தண்டம் = தடி; படை. தண்டத்தலைவன் = படைத்தலைவன். தண்டி + அம் = தண்டம் (ஒறுப்பு). தண்டி + அனம் + அனம் = தண்டனம் (ஒறுப்பு). தண்டி + அனை = தண்டனை (ஒறுப்பு).

தண்டா என்பது கல்வெட்டுக் குறிக்கும் மூவகைத் தண்டனைகளுள் ஒன்று.

தள் என்னும் வேர்ச்சொற்கே பருத்தற் பொருளுளது.

தள் - தளம் = கனம், திண்மை (சீவக. 719, உரை).

தளம் - தடம் = பருமை. “தடவும் கயவும் நளியும் பெருமை". (தொல்.

803).

தடா = பருமை. (கல்லாடம், 8 : 15), பெரும்பானை (திவா.).

தடவுத்தாழி

=

பெருஞ்சாடி.

தள் - தாள் - தாளி

=

கூந்தற்பனை. தாளி = தாழி தாழி = பெரும்பானை.

தாள் - தாட்டி = பருமை, வலிமை.

'தழங்கு' என்னும் சொல் 'முழங்கு' என்பதுபோல் ஒலிப் பெருமையை உணர்த்தும்.

முன்னுதல் = கருதுதல், எண்ணுதல்.

– முனம் - மனம்.

முன்னம் = மனம் (திவா.). முன்னம் - முனம்

முன்

மன். மன் +

திரம் = (மன்றிரம்) - மந்திரம்.

ஒ.நோ: மன் - மன்று - மந்து - மந்தை.

முன்று – முந்து, பின்று - பிந்து.