உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 39.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சமற்கிருதவாக்கம்

எழுத்து

125

5) ஒலி நூற்புலமை

தமிழ் நெடுங்கணக்கில் தனியெழுத் தொலிகளே இடம் பெற்றுள்ளன. சமற்கிருத நெடுங்கணக்கில், அசைகளும் புணர்மெய்களும் சேர்க்கப்பட்டுள்ளன; உயிர் மெய்கள் உயிர்களாகக் காட்டப்பட்டுள்ளன.

ரு, லு முதலிய எழுத்துகள் குற்றியலுகரம் சேர்ந்த ரகர லகர மெய்கள்; அம், அ : என்பவை அகரத்தொடு கூடிய மூக்கொலி விசர்க்கங்கள்; மூக்கொலி சேர்ந்த வல்லினம் புணர் மெய்கள்.

6) வருடொலிகள் (Linguals or Cerebrals).

ட,

ண என்னும் வருடொலிகள் ஆரியத்திற்குரியவையல்ல; தமிழுக்கும் திரவிடத்திற்கும் திரவிட அடிப்படையைக் கொண்ட வடநாட்டு மொழிகட்குமே யுரியவை.

கால்டுவெல் ஐயர் காலத்தில் தொல்காப்பியமும் கழக நூல்களும் கழக மருவிய நூல்களும் மறையுண்டு கிடந்தமையாலும், குமரிக்கண்ட உண்மை அறியப்படாதிருந்ததனாலும், தனித்தமிழ் உணர்ச்சி தோன்றா திருந்ததனாலும், தமிழ் நெடுங்கணக்கு வடமொழி நெடுங் கணக்கைத் தழுவிய தென்று அவர் வரைந்திருப்பது இற்றைக்குச் செல்லாதென்று கூறி விடுக்க.

சமற்கிருத வரி வடிவு வகை :

சமற்கிருத வரி வடிவு, கிரந்தம், தேவநாகரி என இரு வகைப்படும். இவற்றுள் முந்தியது கிரந்தம். வேத ஆரியர் தமிழொடு தொடர்பு கொண்ட பின், தமிழ் வரிவடிவைப் பின்பற்றிச் சமற்கிருதத்திற்கு அமைத்துக் கொண்டதே கிரந்தம். கிரந்தம் ஏற்பட்ட பின்பும், வேதம் நீண்ட காலம் எழுதப்படாமலே யிருந்து வந்தது. இதை,

ஆற்ற லழியுமென் றந்தணர்கள் நான்மறையைப் போற்றியுரைத் தேட்டின் புறத்தெழுதார் - ஏட்டெழுதி வல்லுநரும் வல்லாரும் வள்ளுவனார் முப்பாலைச் சொல்லிடினும் ஆற்றல்சோர் வின்று.”

என்னும் திருவள்ளுவமாலைச் செய்யுள் உணர்த்தும்.

தென்னாட்டுக் கிரந்தத்திற்குப்பின் வடநாட்டிலெழுந்த வடமொழி வரிவகை தேவநாகரி நகரத்தில் அல்லது நாகரிகமாகத் தோன்றியதென்பது பற்றியும், தேவ மொழிக்குரிய தென்பது பற்றியும், தேவநாகரி எனப்பட்டது. அதைப்பற்றி மானியர் உல்லியம்சு என்பவர்தம் சமற்கிருத அகர முதலியின் முன்னுரையில் 28ஆம் பக்க அடிக் குறிப்பில் பின் வருமாறு குறிக்கப்பட் டுள்ளது.