உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 39.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26

தென்சொற் கட்டுரைகள்

அம்பு (arrow) போலப் பெய்யும் மழைநீர் அம்பு எனினும் ஒக்கும். அரணியம்: அரண் + இயம். இயம் ஒரு விகுதி(suffix).

அரணியம் = காடு, அரணாயிருப்பது.

நால்வகை அரண்களிற் காட்டரண் ஒன்று.

அரணியம்

ஆரணியம்.

அரன்: அர் ஓர் ஒலிக்குறிப்பு.

அர் + அம் = அரம், ஒரு கருவி, அர் என்று ஒலிப்பது. அரம் - அரம்போல் தேய்த்தல், அழித்தல்.

அரம் - துன்பம், அழிவு செய்வது. அரம் (harm) - அரந்தை (மரூஉ).

அரம் = அச்சம், துன்பத்தினாலாவது.

அரள் = அஞ்சு. அரள் - horror.

=

அரற்று = அஞ்சிக் கதறு.

அரன் = தேவன், அஞ்சத் தக்கவன், வருத்துபவன். மலையிலும் காட்டிலுமுள்ள தெய்வங்கள் தமியரை வருத்துமென்பது தமிழ்நாட்டுக் கொள்கை. குறிஞ்சித்திணைச் செய்யுள்களில் சூரர மகளிர் என்பது பெருவழக்காய் வருவதைச் சங்க நூல்களிற் காணலாம். சூர் = அச்சம். அரமகளிர் = தெய்வப் பெண்டிர்.

அரன் = சிவன், மலைத்தெய்வம்.

மலைநாட்டிலேயே சைவம் முதன்முதல் தோன்றிற்று. குறிஞ்சித் தெய்வமாகிய முருகன் சிவபிரானது மகன். அகத்தியர் முதலிய பண்டை முனிவரும் மலையிலேயே வதிந்தனர்.

அரன் = உருத்திரன்; ஊழியிறுதியில் உலகையழிப்பவன்.

அரன் - ஹரன். cf. ஆலி - hail.

அர் + இ = அரி - அரி - அழிப்பது.

அரித்தல் - பூச்சிகள் பொருள்களை அழித்தல்.

அரி = சிங்கம், விலங்குகளை அழிப்பது.

சுரஅரி- (ஜ்வரஹரி) -காய்ச்சலை அழிக்கும் மருந்து.

அரி =

=

விஷ்ணு, சிங்கவடிவு கொண்டவன். சிவனுக்கு மனைவியா யிருந்தவன் எனினும் ஒக்கும்.

அரன் ஆண்பால். அரி பெண்பால். அரி - ஹரி.

அராகம்: அர் ஓர் ஒலிக்குறிப்பு.

அராகம் = பண், சந்தம், ஓசை.