உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 39.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடமொழித் தென்சொற்கள்

பகு-பா. பா + தி = பாத்தி.

பாத்து + இடு இடு = பாத்திடு, இடு துணைவினை.

பாத்திடு-பாத்தீடு-பாதீடு, முதனிலை திரிந்த தொழிற்பெயர்.

35

பாதம். பதி + அம் = பாதம், முதனிலை திரிந்து விகுதி பெற்ற தொழிற் பெயர்.

நிலத்திற் பதிவது பாதம்.

முகம். மூசு மூசு என்பது மூச்சுப்பற்றிய ஒலிக்குறிப்பு.

மூசு மூசு என்று உயிர்ப்பது மூச்சு.

மூச்சுவிடும் உறுப்பு (மூச்சி)-மூஞ்சி.

மூச்சு-மூக்கு= 1. மூச்சுவிடும் உறுப்பு. 2. மூக்கிலுள்ள மலம்.

மூக்கு-peak, Eng. மூக்குப்போன்ற சிகரம்.

மூக்கு-(மூக்கம்)-(முக்கம்)-முகம்.

முகத்தல்=மூக்கினால் மணமறிதல்.

முக-முகர், முகர்தல்-மணமறிதல்.

முக-மோ ‘மோப்பக் குழையும் அனிச்சம்’

(குறள். 90)

முகர்-நுகர்; நுகர்தல்=1. மணமறிதல். 2. இன்பந் துய்த்தல். முகத்தல்=விரும்புதல் 'மூர்க்கரை மூர்க்கர் முகப்பர்' (உபலக்ஷணம்) முக-மோ. மோ + கம் = மோகம். மோகம்-மோகி; மோகித்தல் காதலித்தல்.

=

மோகி + அனம் = மோகனம். மோகனம் செய்யும் பேய் மகள், மோகனி-மோகினி

முகம்-முகடு = 1. கூரை, மேனோக்கிய மூக்குப் போல்வது 2. உச்சி. அண்ட முகடு = வானத்தின் உச்சி.

=

முகடு + இ முகடி= = 1. முகட்டுத்தரத்திலுள்ள பேய், 2. மூதேவி. முகடி-முகரி. முகடி-மோடி = 1. பேய். 2. காளி. முகடு பூச்சி = முகட்டுப் பூச்சி - மோட்டுப் பூச்சி. -மூட்டைப்பூச்சி.-மூட்டை, bug. மூட்டை + பாய்ச்சால் = மூட்டைப்பாய்ச்சால் - மூட்டையைத்தின்பது. முகடு-மோடு-மேடு, மோடு=1. உயரமான தரை. 2. பெருமை. மூக்கு = 1. பறவையின் அலகு, மூக்குப்போல நீண்டிருப்பது. beak, E. 2. கெண்டிமூக்கு, மூக்குப்போல்வது.

3. பயற்றின் முனைப்பக்கம், மூக்குப்போல்வது.

4. துருத்தியின் குழல், மூக்குப்போல்வது.

மூக்கு-முக்கு=1. மூலை, nook, E. 2. சிறு தெரு, மூக்குப்போல் ஒடுங்கியது.