உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 39.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62

தென்சொற் கட்டுரைகள்

னை

இதுகாறும் கூறியவற்றால், இலக்கணம், இலக்கியம் என்னும் சொல் லிரண்டும் தென்சொல்லே யென்று தெற்றெனத் தெளிக. குலப் பிரிவின யால் தமிழனுக்கு வந்த தாழ்வு, விடுதலை யடைந்த பின்பும் தமிழைத் தாக்காதிருக்க.

இலக்கணம், இலக்கியம் என்னும் இரண்டையுங் குறிக்கத் தமிழில் 'அணங்கம் அணங்கியம்' என வேறிரு சொற்களும் உள. அஞ்சணங்கம் ஐந்திலக்கணம், அஞ்சணங்கியம் ஐந்திலக்கியம் (யாழ்ப்பாண அகராதி). அணங்கம் இலக்கணம் (பொதிகை நிகண்டு). அணங்குதல்-ஒலித்தல். “புகையணங்க” (புறப்பொருள் வெண்பாமாலை 10, 18). இவை சென்னைப் பல்கலைக் கழக அகராதியின் இணைப்பு மடலத்திலும் குறிக்கப்பட்டுள்ளன. அணங்கு = ஒலி, எழுத்து, அணங்கு அணங்கம் = இலக்கணம். அணங்கு அணங்கியம் = இலக்கியம்.

=

அணங்கு என்னும் வினைச்சொல் தூய தனித்தமிழ்ச் சொல்லாதலில், அணங்கம், அணங்கியம் என்னும் பெயர்களை வடசொல்லெனத் தலைசிறந்த தமிழ்ப் பகைவரும் வாய்திறவார் என்பது தெளிதருதேற்றம்.

“செந்தமிழ்ச் செல்வி" ஏப்பிரல் 1948