உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 39.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76

தென்சொற் கட்டுரைகள் என்னும் தொல்காப்பியச் சூத்திரத்தில், 'கால்' என்பது ஒரு வினையெச்ச விகுதியாகக் கூறப்பட்டுள்ளது. தொல்காப்பியம் எவ்விதத்தும் இற்றைக்கு 3000 ஆண்டுகட்கு முற்பட்டதாகும்.

காலை என்பது ஒரு நாளின் சிறந்த காலை அல்லது வேளையாகிய விடியற்காலத்தை உணர்த்தும். காலை, விடிகாலை என்பன உலக வழக்கு. "காலையும் மாலையும் கைகூப்பிக் கால்தொழுதால்" எனச் செய்யுள் வழக்கிலும் அச் சொல் அப் பொருளில் வந்தது. காலை என்னும் சொல் முற்பகலையும், முற்பகலின் முற்பகுதியையும் குறிப்பதுமுண்டு.

66

66

'இருவீற்றும் உரித்தே சுட்டுங் காலை

இசையுட னருகும் தெரியுங் காலை

""

எனத் தொல்காப்பியத்தில், காலை என்னுஞ் சொல் பொழுது, வேளை என்னுஞ் சொற்கள்போல ஒரு குறித்த நேரத்தை உணர்த்திற்று.

காலம் என்னும் சொல் ஒரு குறித்த காலத்தையும் விடியற் காலத்தையும் பருவ காலத்தையும் ஒரு காலப் பகுதியையும் பொதுவான காலத்தையும் உணர்த்தும். 'விடியற்காலம்', 'சாயங்காலம்' ‘இராக்காலம்’ பேறுகாலம்', 'துன்பகாலம்', 'காலத்தினாற் செய்த நன்றி' (குறள். 102), 'ஆயியல் நிலையுங் காலத் தானும்' (தொல்காப்பியம்) என்னுந் தொடர் களில் ஒரு குறித்த காலமும் 'காலத்தாலே யெழுந்து' (காத்தாலை யெழுந்து என்பது கொச்சை வழக்கு.) என்னுந் தொடரில் விடியற்காலமும்; வேனிற் காலம்(கோடைகாலம்), மழைகாலம்(கார்காலம்) முதலிய தொடர்களில் பருவகாலமும்; முற்காலம், தற்காலம், கற்காலம், 'கீழோர்க் காகிய காலம்’(தொல்.) முதலிய தொடர்களில் ஒரு காலப்பகுதியும் 'பொருள்இடம் காலம் சினைகுணம் தொழில்' என்னுந் தொடரில் பொதுவான காலமும் குறிக்கப்பட்டன.

ஆங்கிலத்தில் 'Tense' என்று கூறும் வினையிலக்கணத்தைக் குறிக்கத் தமிழில் காலம் என்னும் சொல்லே கொள்ளப்பட்டுள்ளது.

“வினையெனப் படுவது வேற்றுமை கொள்ளாது நினையுங் காலைக் காலமொடு தோன்றும்”

"காலந் தாமே மூன்றென மொழிப'

'இறப்பின் நிகழ்வின் எதிர்வின் என்றா

அம்முக் காலமும் குறிப்பொடுங் கொள்ளும்

(தொல். சொல். 683)

(தொல். சொல். 684)

(தொல். சொல். 685)

வினைச்சொல் காலங்காட்டுவதால் காலக்கிளவி என்றும் கூறப்படும்.

கிளவி-சொல்.

66

'மாரைக் கிளவியும் பல்லோர் படர்க்கைக் காலக் கிளவியொடு முடியும் என்ப”

(தொல். சொல். வினை. 10)