உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 39.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78

தென்சொற் கட்டுரைகள்

சென்னைப் பல்கலைக்கழக அகராதியில் (Lexicon) கால் என்னும் சொற்கு 44 பொருள்கள் கூறப்பட்டுள்ளன. அவையாவன:-

1. காற்பங்கு

2. 'வ' என்னும் இலக்கம்

3. பாதம்

4. பூவின் தாள்

5. அடிப்பாகம்

17. மகன்

18. வமிசம்

19. இனமுறை

20. பிறப்பிடம்

21. வாய்க்கால்

6.

'ா' என்ற எழுத்து

7. உருள்

22. பிரிவு 23. வழி

8. வண்டி

9. கோல்

10. குறுந்தறி

11. நெசவுத்தறியின் மிதி

12. கைப்பிடி

13. தூண்

14. பற்றுக்கோடு

15. முளை 16. மரக்கன்று

கால் = 1. காற்று

2. வாதநோய்

24. நடை 25. இடம்

26. வனம்

27. வின்முனை 28. மரக்கால்

29. அளவு

30. பின்னுதற்கு வகுத்த மயிர்ப்பகுதி 31. கிரணம்

32.மழைக்கால்

3. பஞ்சபூதம்

கால் =

1 பொழுது

4. காலன்

2. செவ்வி

5. இயமன்

3. தடவை

6. கருநிறம்

கால் =

1. 7ஆம் வேற்றுமை உருபு

2. வினையெச்ச விகுதி

3. ஓர் உபசர்க்கம்.

இந் நாற்பத்து நான்கு பொருள்களும், கால்போலக் கீழிருப்பது, தாங்குவது, நீண்டிருப்பது, பிரிந்திருப்பது, காற்பங்காயிருப்பது, நிலத்தில் ஊன்றுவது முதலிய கருத்துப்பற்றியனவாயே இருத்தல் காண்க.

கால் உடம்பில் ஓர் இடமாயிருத்தலால், அதன் பெயர் இடத்தையும் குறிப்பதாயிற்று. பந்தர்க்காலுக்குப் பெரும்பாலும் மூங்கிலை நடுவதாலும், மூங்கில் வளர்வது காட்டிலாதலாலும், மூங்கிற்குழாயை அறுத்து முகத்தற் கருவியாகக் கொள்வராதலாலும், கால் என்னும் பெயர் மூங்கில், வனம், மரக்கால் என்னும் பொருள்களையும் தரும்.

பொழுது முதலிய மூன்று பொருள்களும் காலத்தையும், காலன் முதலிய மூன்று பெயர்களும் மழைக்காலையும் மூலமாகக் கொண்டன வாகும்.