உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 4.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இன்பத்துப்பால் கற்பியல் - நிறையழிதல்

91

இனி என் வயத்ததன்று என்பதாம். 'மன்' ஒழியிசைக்கண் வந்தது. ஓகாரம் இரக்கக் குறிப்பு. மன்றுபடுதல் பலருமறிதல்.

1255.

செற்றார்பின் செல்லாப் பெருந்தகைமை காமநோ யுற்றா ரறிவதொன் றன்று.

(நம்மை மறந்தாரை நாமும் மறத்தற்குரியோம் என்ற தோழிக்குச் சொல்லியது.) செல்லாப் பெருந்தகைமை

(இ-ரை.) செற்றார்பின் தம்மைத் துன்புறுத்திப் பிரிந்து சென்றார் பின் செல்லாது தாமும் நீங்கி நிற்கும் நிறை யுடைமை; காமநோ- உற்றார் அறிவது ஒன்று அன்று காமநோ-ப் படாதவர் அறிவ தொன்றேயன்றி அந் நோ-ப்பட்டவர் அறிவ தொன்றன்று.

காமநோ-ப்பட்டவர் மானமுடையவரல்லர். ஆதலால் 'செற்றார்பின் செல்லாப் பெருந்தகைமை' அவர்க்கில்லை யென்பதாம். இன்பக் காலத்தைத் துன்பக்காலமாக மாற்றியதால் 'செற்றார்' என்றார். பின் செல்லுதல் மனத்தால் டைவிடாது நினைத்தல். 'பெருந்தகைமை' இங்கு ஆகுபொருளி.

1256. செற்றவர் பின்சேறல் வேண்டி யளித்தரோ வெற்றென்னை யுற்ற துயர்.

(இதுவுமது.)

(இ-ரை) செற்றவர் பின்சேறல் வேண்டி - என்னைத் துன்புறுத்திப் பிரிந்து சென்றவர் பின்னே யான் செல்லுதலை வேண்டுதலான்; என்னை உற்ற துயர் எற்று - என்னை யடைந்துள்ள காமநோ- எத்தகையது? அளித்து - ஐயோ! இரங்கத்தக்கது!

இக் காமநோ- என்னை அளவிறந்து இழிவுபடுத்துவதால் மிகக் கொடிது என்பதாம். 'செற்றவர்' என்றது மேற்குறளிற் செற்றார்' என்றது போன்றதே. 'அளித்து’ எதிர்மறைக் குறிப்பு. 'அரோ' அசைநிலை.

1257.

நாணென வொன்றோ வறியலங் காமத்தாற் பேணியார் பெட்ப செயின்.

(பரத்தையிற் பிரிந்துவந்தவனாகக் கருதப்பட்ட தலைமகனோடு நிறையழிவாற் கூடிய தலைமகளை நோக்கி,

நீ புலவாமைக்குக் கரணியம் யாதென்ற தோழிக்குச் சொல்லியது.)