இன்பத்துப்பால் -கற்பியல் - அவர்வயின் விதும்பல்
-
1259. புலப்ப லெனச்சென்றேன் புல்லினே னெஞ்சங் கலத்த லுறுவது கண்டு.
93
(இதுவுமது.)
அவர் வந்தபொழுது உரை
(இ-ரை) புலப்பல் எனச் சென்றேன்
―
யாடாது ஊடவேண்டுமென்று கருதி அவர் முன்நில்லாது வேறோரிடத்திற்குப் போனேன்; நெஞ்சம் கலத்தல் உறுவது கண்டு புல்லினேன் அங்ஙனம் போ-த்தான் என்ன? என் உள்ளம் நிறையில் நில்லாது அறைபோ- அவரோடு கலத்தல் தொடங்குதலை யறிந்து இனி இவ் வூடல் பயன்படா தென்று அவரைத் தழுவினேன்.
நிறையழிந்தவர்க்குக் கூடலேயன்றி ஊடலில்லை யென்பதாம். 1260. நிணந்தீயி லிட்டன்ன நெஞ்சினார்க் குண்டோ புணர்ந்தூடி நிற்பே மெனல்.
(இதுவுமது.)
(இ-ரை) நிணம் தீயில் இட்டு அன்ன நெஞ்சினார்க்கு
கொழுப்பைத்
தீயிலிட்டால் உருகுவதுபோலக் காதலரைக் கண்டவுடன் நிறையழிந் துருகும் உள்ளத்தையுடைய மகளிர்க்கு; புணர்ந்து ஊடி நிற்பேம் எனல் உண்டோ அவர் அணுகி நிற்க யாம் ஊடி அந் நிலையிலேயே நிற்கக் கடவேம் என்று கருதுதல் உளதோ? இல்லையே!
யான் அத்
தன்மையேனாகலின்
அந் நிலைமை யில்லை
யென்பதாம். புணர்தல் தலைக்கூடி நிற்றல். அவர் புணர்ந்து, யாம் ஊடிநிற்பேம் என்பது, மணியடித்து வண்டி புறப்பட்டது என்றாற்போன்ற தனிநிலைக் கிளவியச் சொல்லியமாம். (absolute clause) (sentence)
அதி. 127 - அவர்வயின் விதும்பல்
அதாவது, தொலைவிடைப் பிரிவின்கண் தலைமகனுந் தலைமகளும் வேட்கைமிகுதியினால் ஒருவரையொருவர் காண்டற்கு விரைதல். இதனுள் தலைமகள் கூற்று நிறையழிவால் நிகழ்ந்ததாகலின், நிறையழிதலின் பின் வைக்கப்பட்டது.