இன்பத்துப்பால் - கற்பியல் - புணர்ச்சி விதும்பல்
-
103
'கண்ணினாற் காமநோ- சொல்லியிரவு' என்பதே மூலமாதலால் ‘இரவு’ என்பதற்கு “உடன்போதல் குறித்துத் தம் அடியினை யிரத்தல்” என்று பரி மேலழகர் உரைத்திருப்பது மிகையே யாம். தலைமகன் தன் பிரிவின்மைக் குறிப்பை அறிவுறுப்பான், தலைமகளின் நாணச் சிறப்பை வியந்து அதைப் பொதுப்படுத்திக் கூறியவாறு.
அதி. 129 - புணர்ச்சி விதும்பல்
அதாவது, தலைமகனும் தலைமகளும் கலவிக்கண் விரைதல். தலை மகள் பிரிவாற்றாது உடன்போக் குடம்பாட்டுக் குறிப்புணர்த்தலும், தலை மகன் பிரிவின்மைக் குறிப்புணர்த்தலும் புணர்ச்சிக் கேதுவாதலின், குறிப்பறி வுறுத்தலின் பின் வைக்கப்பட்டது.
1281.
உள்ளக் களித்தலுங் காண மகிழ்தலுங் கள்ளுக்கில் காமத்திற் குண்டு.
பிரிதற் குறிப்பினனாகிய தலை மகனோடு நீ புலவாமைக்குக்
காரணம் யாதென நகையாடிய தோழிக்குச் சொல்லியது.)
―
(இ-ரை.) உள்ளக் களித்தலும் நினைத்த வளவிலேயே உள்ளங் கிளர்தலும்; காண மகிழ்தலும் கண்ட வளவிலேயே இன்புறுதலும்; காமத் திற்கு உண்டு கள்ளுக்கு இல் - காம நுகர்ச்சிக்குரிய காதலன் (அல்லது காதலி) பற்றி யுண்டாகும், குடிப்பிற்குரிய கள்பற்றி யுண்டாகா.
ஆதலாற் காதலன் முன்பு புலப்ப தெங்ஙனம் என்பதாம். களித்தல் கள்ளுண்டு மகிழ்ச்சியடைதல்; மகிழ்தல் கள்ளுண்டு வெறித்து இன்புறுதல். இவ் விரண்டும் உண்டாலன்றி யின்மையின் 'கள்ளுக்கில்' என்றாள். 'உண்டு' என்பது முன்னுஞ் சென்றியைதலால் இறுதி விளக்கு. இதை ஓர் அணியாகக் கொள்வர்.
1282.
தினைத்துணையு மூடாமை வேண்டும் பனைத்துணையுங் காம நிறைய வரின்.
(இதுவுமது.)
(இ-ரை.) காமம் பனைத் துணையும் நிறைய வரின் - மகளிர்க்குக் காமம் பனையளவாகவும் நிரம்ப வுண்டாகுமாயின்; தினைத்துணையும் ஊடாமை வேண்டும் - அவர் தம் காதலரொடு தினையளவும் ஊடுதலை மேற்கொள்ளா திருத்தல் வேண்டும்.