—
இன்பத்துப்பால் கற்பியல் நெஞ்சொடு புலத்தல்
-
109
முன்னெல்லாம் புலப்பதாக விருந்து இன்று புணர்ச்சி விதும்புதலின் இவ்வாறு கூறினாள். 'அன்ன' என்றது ஊடும் அல்லது புலக்குந் திறங்களை, 'காண்' உரையசை. 'மற்று' பின்மைப் பொருளது.
1295. பெறாஅமை யஞ்சும் பெறிற்பிரி வஞ்சு
மறாஅ விடும்பைத்தென் நெஞ்சு.
(வாயிலாகச் சென்ற தோழிகேட்பத் தலைமகள் சொல்லியது.)
―
(இ-ரை.) பெறாமை அஞ்சும் காதலரைப் பெறாதபோது அப் பெறா மைக்கு அஞ்சுகின்றது; பெறின் பிரிவு அஞ்சும் - பெற்ற போதோ எதிர்காலத் தில் நேரக்கூடிய பிரிவைக் கருதிக்கொண்டு அதற்கு அஞ்சுகின்றது; என் நெஞ்சு அறா இடும்பைத்து - இங்ஙனம் என் உள்ளம் தீராத துன்பத்தையுடையதா யிருக்கின்றது.
பெறாதபோது கலவியின்மைபற்றியும் பெற்றபோது கலவி தொடராமை பற்றியும் அச்சம் உண்டாவதால், என் வாழ்க்கை எப்போதும் துன்பவாழ்க் கையே என்பதாம். அஞ்சுதல் அஞ்சி வருந்துதல். 'பெறா அமை', ‘அறாஅ’ இசைநிறை யளபெடைகள்.
1296. தனியே யிருந்து நினைத்தக்கா லென்னைத் தினிய விருந்ததென் னெஞ்சு.
(இதுவுமது.)
(இ-ரை) தனியே இருந்து நினைத்தக்கால் - காதலரைப் பிரிந்திருந்து அவர் செ-த கொடுமைகளை யான் தன்னொடு நினைத்தக்கால்; என்னைத் தினிய என் நெஞ்சு இருந்தது என்னைப் பி-த்துத் தின்பதுபோல் துன்பஞ் செ-தற்கே என் உள்ளம் என்னொடு கூட இருந்தது.
―
என் நெஞ்சு என்னோடிருந்தது, அவர் செ-த கொடுமைகளை எண்ணி எனக்கு ஆற்றாமைமேலுந் துன்பஞ் செ-தற்கேயன்றி, இன்று அவைநோக்கி அவரொடு புலத்தற்கன் றென்பதாம்.
1297. நாணு மறந்தே னவர்மறக் கல்லாவென்
மாணா மடநெஞ்சிற் பட்டு.
(இதுவுமது.)