இன்பத்துப்பால் - கற்பியல் - ஊடலுவகை
-
125
(இ-ரை.) ஒளியிழை மன் ஊடுக ஒளி வீசும் அணிகலங்களை யுடையாள் இன்னும் எம்மோடு மிகுதியும் ஊடுவாளாக; யாம் இரப்ப இரா மன் நீடுக அவள் அங்ஙனம் ஊடுதற்கும் யாம் அதை யுணர்த்தும் பொருட்டு அவளை இரந்து நிற்றற்கும் போதிய அளவு காலமிருக்கும் வகை இவ் விரவு மிகுதியும் நீடுவதாக.
'ஊடுக', 'நீடுக' என்பன ஆர்வ வியங்கோள் வினைகள். 'மன்' மிகுதிப் பொருளது. ஓகாரங்கள் அசைநிலை. 'ஒளியிழை' அன்மொழித்தொகை. பின் னர்ப் பேரின்பம் பெறக்கூடுதல் உறுதியாதலின், இவ் விராமுழுதும் ஊடலே நிகழினும் நன்றே யென்பதாம்.
1330. ஊடுதல் காமத்திற் கின்ப மதற்கின்பங்
கூடி முயங்கப் பெறின்.
(இதுவுமது.)
(இ-ரை.) காமத்திற்கு இன்பம் ஊடுதல் காம நுகர்ச்சிக் கின்பமாவது, நுகர்தற்குரிய காதலன் காதலியாகிய இருவருட் காதலி காதலன்பாற் குற்ற முள்ளவிடத்தும் இல்லாவிடத்தும் அவனொடு ஊடுதல்; அதற்கு இன்பம் கூடி முயங்கப் பெறின் அவ் வூ கின்பமாவது அதனை அளவறிந்து நீக்கிக் காதலன் காதலி யிருவரும் தம்முட் கூடித் தழுவப் பெறின் அத் தழுவல்.
கூடுதல் கருத்தொத்தல், தழுவுதல் இங்குப் புணர்தல். துனி நிலையில் இன்பம் பயவாமை யானும், இரண் டிற்கும் இடைப்பட்ட புலவிநிலையை நீளவிடாது அளவறிந்து நீக்கிக் கூடி, அளவில்லாத இன்பம் பெறுதல் அரிதென்பதுபற்றிக் 'கூடி முயங்கப் பெறின்’ என்றான். அவ் வீரின்பமும் யான் பெற்றே னென்பதாம்.
துன்பம் பயத்தலானும், ஊடல்நிலையில்
ஈண்டுப் பிரிவினை வடநூன் மதம்பற்றிச் செலவு ஆற்றாமை விதுப்புப் புலவியென நால்வகைத் தாக்கிக் கூறினார். அவற்றுட் செலவு பிரிவாற்றாமை யுள்ளும், ஆற்றாமை படர்மெலிந் திரங்கன் முதல் நிறையழித லீறாயவற் றுள்ளும், விதுப்பு அவர்வயின் விதும்பன் முதற் புணர்ச்சி விதும்ப லீறாய வற்றுள்ளும், புலவி நெஞ்சொடு புலத்தன் முதல் ஊடலுவகை யீறாயவற் றுள்ளுங் கண்டுகொள்க. அஃதேல், வடநூலார் இவற்றுடனே சாபத்தினானாய நீக்கத்தினையுங் கூட்டிப் பிரிவினை ஐவகைத் தென்றாரா லெனின், அஃது