உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 4.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




ன்பத்துப்பால் - களவியல்

தகையணங்குறுத்தல்

LO

5

ஐயம், தெளிதல் என்னும் மூன்றும் அடங்கும். குறிப்பறிதலுங் கருதப் பெறும். ஆதலால், இது ஆசிரியரே அமைத்துக்கொண்ட கலவைத் துறையாம்.

உலகிற் காமவின்பத்தை உயர்ந்த அளவில் நுகர்தற்கு, அவ்வவ் விடத் தில் ஒப்புயர்வற்ற பதவியும் மாபெருஞ் செல்வமுங் கழிபெருங் கட்டழகும் வேண்டியிருத்தலின், இலக்கண நூலார் கிழவன், வேள், மன்னன், கோ, வேந்தன் என்று ஏறுவரிசையில் ஐவகைப்பட்ட அரசவகுப்பாருள்

ஒருத்தியையுமே

காதலனும்

காதலியுமாகக்

ஒருவனையும் கொண்டிருக்

கின்றனர். இது கிழவன் கிழத்தி, தலைவன் தலைவி, தலைமகன் தலைமகள் என்று காதலரைக் குறித்தலாலும்; ஊர, (குறும்பொறை) நாட, வெற்ப, துறைவ, தோன்றால் என்று தலைவனை விளித்தலாலும்; காதலர் தேரும் யானையும் குதிரையும் ஊர்வதாகச் சொல்லப்படுவதாலும் அறியப்படும். இங்ஙனம் உயர்ந்தோரையே காதலராகக் கொண்டாலும், உலகியற்கொத்த உண்மைத் தன்மையும் ஊட்டு வதற்குத் தாழ்ந்தோர்க்குரிய செ-திகளும் இடையிடை விரவிக் கூறப்படும். இது,

“நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும் பாடல் சான்ற புலனெறி வழக்கம்

(தொல். அகத். 53)

எனப்படும். இனி, காதல காதலியர் இருவரும் குடியுங் குணமும் உருவுந் திருவும் அன்பும் அறிவும் ஒத்திருப்பதும், இன்பச்சிறப்பிற்கும் நீடிப்பிற்கும் வேண்டப்படும். ஆயினும், காதலனுக்குப் பதினாறாட்டைப் பருவமும் காதலிக்குப் பன்னீராட்டைப் பருவமுமாக, அகவையில்மட்டும் ஒவ்வாமை கொள்வர். உருவுங் குணமும் அன்பு மொழிந்த மற்றவகைகளிலும் காதலன் உயர்ந்தவனா யிருக்கலாம். இவையும் புலனெறி வழக்கம்.

‘ஒத்த கிழவனுங் கிழத்தியுங் காண்ப

மிக்கோ னாயினுங் கடிவரை யின்றே”

“பிறப்பே குடிமை ஆண்மை ஆண்டோ

டுருவு நிறுத்த காம வாயில்

நிறையே அருளே உணர்வொடு திருவென

முறையுறக் கிளந்த ஒப்பினது வகையே.

1081.

(தொல். களவு. 2)

(மேற்படி. மெ-ப். 25)

அணங்குகொல் ஆ-மயில் கொல்லோ கனங்குழை மாதர்கொல் மாலும்என் நெஞ்சு.

(தலைமகளுருவு முதலியன முன் கண்டறிந்தவற்றினுஞ் சிறந்தமையின்,

அவளைத் தலைமகன் ஐயுற்றுக்கூறியது.)