154
திருக்குறள்
தமிழ் மரபுரை
―
பேக்கு பிக்ஷு (வ.).
வேலை: வேல் - வேலி = வேலமுட் கிளையால் அமைத்த வளைசல், சுற் றெல்லை, எல்லை. வேல் - வேலை = எல்லை, காலவெல்லை, பொழுது. வேலை - வேளை – நேரம், அமையம், பொழுது. வேலை - வேலா(வ).
இவற்றின் விளக்கத்தையெல்லாம் என் வடமொழி வரலாறு என்னும் நூலுட் காண்க.
இன்னும் இவைபோன்ற சொற்கள் பல உள. விரிவஞ்சி அவை இங்குக் கூறப்பட்டில.
5. திருக்குறட் சிறப்புச் சொற்கள்
அதி (நுட்பம்), அளறு (நரகம்), அறன்கடை, கஃசு, குறியெதிர்ப்பை, கோட்டிகொளல், சோகா, தீயுழி, தோல், நெடுநீர், வரன்.
தோல் என்பது தொல்காப்பியச் சொல்லா வேறா என்னும் ஐயுறவிற்கிட மானதாம். அளறு பொருள்பற்றியும் வரன் என்பது வடிவுபற்றியும் சிறப்பாம். கோட்டிகொளல், சோகா என்பன துணைவினைபற்றியே சிறப்பாம்.
6. திருவள்ளுவர் பெயரிலுள்ள தனிப்பாடல்கள் (தனிப்பாடற்றிரட்டு - முதற்பாகம்)
1. எவ்வுயிருங் காக்கவோ ரீசனுண்டோ இல்லையோ
அவ்வுயிரில் யானொருவ னல்லனோ - வவ்வி
அருகுவது கொண்டிங் கலைவதே னன்னே வருகுவது தானே வரும்.
2. பூவி லயனும் புரந்தரனும் பூவுலகைத்
தாவியளந்தோனுந் தாமிருக்க - நாவில்
இழைநக்கி நூனெருடு மேழை யறிவேனோ குழைநக்கும் பிஞ்ஞகன்றன் கூத்து.
3. ஐயரென் றுரைத்தீர் நாயேற் கடுக்குமோ வருளி லேனை
பொ-யொடு கனவு மற்றுப் புலன்களை யொடுக்கிக் கொண்டு உ-யவே புலன்க ளைந்து முயர்பர வெளியுள் ளாக்கி
வெ-யவன் மதியம் போல விரவுவ ரைய ராவர்.