பின்ணிணைப்பு
169
(பொ-ரை.) இம்மை மறுமைக்கும் எழுபிறப்பிற்கும் பயன்படவும் நாற் பொருளும் நடைபெறவும், திருவள்ளுவர் திருக்குற ளியற்றினர்.
செயிர்க்காவிரியார் மகனார் சாத்தனார்
41. ஆவனவு மாகா தனவு மறிவுடையார்
யாவரும் வல்லா ரெடுத்தியம்பத் - தேவர்
திருவள் ளுவர்தாமுஞ் செப்பியவே செ-வார்
பொருவி லொழுக்கம்பூண் டார்.
(பொ-ரை.) மக்களுக்கு வேண்டியவற்றையும்
வற்றையும் அறிஞரும் எடுத்துச்சொல்லுமாறு,
வேண்டாத
திருவள்ளுவர் இயற்றிய
திருக்குறட் கூற்று களையே, ஒழுக்கத்தில் உயர்ந்தோர் கடைப்பிடிப்பர்.
செயலூர்க் கொடுஞ்செங்கண்ணனார்
42. வேதப் பொருளை விரகால் விரித்துலகோ
ரோதத் தமிழா லுரைசெ-தா - ராதலா
லுள்ளுந ருள்ளும் பொருளெல்லா முண்டென்ப
வள்ளுவர் வா-மொழி மாட்டு.
(பொ-ரை.) திருவள்ளுவர் ஆரிய வேதப்பொருளைத் தமிழுலகம் அறிதற்பொருட்டுத் தமிழில் விரித்துரைத்தார். ஆதலால், திருக்குறளில் மக்கள் கருதும் பொருள்களெல்லாம் உள்ளன.
வண்ணக்கஞ் சாத்தனார்
43. ஆரியமுஞ் செந்தமிழு மாரா-ந் திதனினிது சீரிய தென்றொன்றைச் செப்பரிதா - லாரியம் வேத முடைத்து தமிழ்திரு வள்ளுவனா
ரோது குறட்பா வுடைத்து.
(பொ-ரை.) வடமொழியையும் தென்மொழியையும் ஒப்புநோக்கி இது சிறந்தது என்று ஒன்றைச் சொல்ல முடியாது. வடமொழியில் வேதமுள்ளது; தென்மொழியில் திருக்குறள் உள்ளது. ஆதலால், இரண்டும் சமமே.
களத்தூர்கிழார்
44. ஒருவரிருகுறளே முப்பாலி னோதுந்
தரும முதனான்குஞ் சாலு - மருமறைக ளைந்துஞ் சமயநூ லாறுநம் வள்ளுவனார் புந்தி மொழிந்த பொருள்.