174
திருக்குறள்
தமிழ் மரபுரை
174
கலை
திருக்குறள்
தமிழ் மரபுரை
விலங்கொடு மக்க ளனைய ரிலங்குநூல் கற்றாரோ டேனை யவர்.
நவிறொறு நூனயம் போலும் பயிறொறும்
பண்புடை யாளர் தொடர்பு.
பலநல்ல கற்றக் கடைத்து மனநல்ல
ராகுதல் மாணார்க் கரிது.
கலையறிவியல் நூல்கள்
அறுதொழில்: உழவு, நெசவு, ஓவியம், கட்டடம், வாணிகம், கல்வி
(410)
(783)
(823)
ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூன்மறப்பர்
காவலன் காவா னெனின்.
(560)
இலக்கியம்
எண்ணென்ப வேனை யெழுத்தென்ப விவ்விரண்டுங்
கண்ணென்ப வாழு முயிர்க்கு.
(392)
கட்டடமும் பொறிவினையும்
உயர்வகலந் திண்மை யருமையிந் நான்கி
னமைவர ணென்றுரைக்கும் நூல்.
(743)
கடலோடா கால்வ னெடுந்தேர் கடலோடு
நாவாயு மோடா நிலத்து.
(496)
உருவம்
உருவுகண் டெள்ளாமை வேண்டு முருள்பெருந்தேர்க்
கச்சாணி யன்னா ருடைத்து.
(667)
நுண்மா ணுழைபுல மில்லா னெழினலம்
மண்மாண் புனைபாவை யற்று.
(407)
நாணகத் தில்லா ரியக்க மரப்பாவை
நாணா லுயிர்மருட்டி யற்று.
(1020)
மருத்துவம்
மிகினுங் குறையினு நோ-செ-யு நூலோர்
வளிமுதலா வெண்ணிய மூன்று.
(941)