உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 4.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

188

திருக்குறள்

தமிழ் மரபுரை





188

திருக்குறள்

நடுநிலை சால்பு நாட்டினர் யாரே?

கையுங் காலுமா-க் கரவர் வந்தே

வெள்ளை நிறத்தினும் வெடிப்பொலிச் சொல்லினும் விண்ணவர் நிலையை விளம்பியே மாற்ற

பகுத்தறி வைப்பயன் படுத்தாது வைத்தே

மதவியற் பித்தமும் மடவியற் கொடையும் பழங்குடிப் பிறப்பொடு பேதைமை யூட்ட நிலத்ததேவ ரென்னும் நெடும்பொ- நம்பி அடிமைப் பட்டும் மிடிமைப் பட்டும்

அஃறிணை யாயினிர் அனைத்து மிழந்தீர் எஞ்சி யிருப்பது செஞ்சொல் தமிழே! அதனை யேனும் அழியாது காப்பீர்

முதலிரு கழக நூல்களு ளெதுவும்

இதுபோ துண்டோ ஏனிலை ஆ-மின்

ஆரிய மொழியில் அனைத்துமொழி பெயர்த்தபின் அருந்தமிழ் முதனூல் அழியுண் டனவே ஆங்கில வரசும் அம்மொழிக் கல்வியும் நயன்மைக் கட்சியும் மறைமலை யடிகளும் அறிவுறுத் தியபினுஞ் சிறிதுந் திருந்தீர் அறுப்பானை நம்பும் ஆடுகள் போல வெறுப்பானை யின்றும் விரும்பித் தொழுதீர் புறநட் டகத்தே வேர்ப்பான் பகைமை வெளியிட் டுடனே வேறாதல் வேண்டும் இதுதமி ழகமே இதில்தலை தமிழே ஆரிய மென்னும் பூரிய மொழியை

அகற்றித் தமிழை அரியணை யேற்றுவீர்! கோயில் வழிபாடுங் கொண்டாடு மணமும் வாயில் மொழிதமிழ் வழங்குதல் வேண்டும் விண்ணக மொழியும் விண்ணக மாந்தரும் மண்ணகம் வழங்கும் முறைமை யில்லை சிவனியம் மாலியம் எனுமிரு மதங்களும்

செந்தமி ழோரே கண்ட நெறியாம் என்ன பெயரும் இன்றமி ழாக்கிக் கன்னித் தமிழின் கற்பைக் காமின் உங்கள் போன்றே உடலும் உறுப்பும் உள்ள அமெரிக்கர் வெள்ளிடை நீந்தித்

தமிழ் மரபுரை