இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
190
திருக்குறள்
தமிழ் மரபுரை
பிரித்தா னியத்தினும் பிராம ணீயம்
பன்மடி கொடிதே பகரவுங் கொடிதே
முன்ன தொருவ னுடலையே பிணித்தது
பின்னதோ பிறங்கடை யுளத்தையும் பிணிக்கும் கல்வியுஞ் செல்வமுங் கட்டாண் மையும் கணக்கின் பெருமையுங் கரையற் றிருந்தும் சூத்திரர் சற்சூத் திரரெனத் தம்மைத் தாழ்த்திய தமிழர் வீழ்ச்சியை நோக்கின் அரிமா வரிமா கரிமா வனைத்தும் நீல நிறங்கொள் கோலங் கண்டே
நரிமா விற்கு நடுங்கிய தொக்கும் உள்ளந் தமிழனுக் குயரா வாறு
பெருங்கலா யிருப்பது பிராமணர்க் கஞ்சுதல் ஆரிய வடிமை யகன்றா லொழியத்
தேறும் வழியே தென்னவர்க் கில்லை
ஆரிய வேடரி னயர்ந்தனிர் மறந்தனிர் சீரிய மொழிநூல் செம்மையி னுணர்ந்தே ஓரின மாகி உலகத் துயர்க!
பசியும் பிணியும் பகையும் நீங்கி இருதிற உடைமை ஆட்சியும் ஒருகுடை நீழல் ஓங்குக உலகே!
(முற்றும்)